search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரத்தில் நகராட்சி ஊழியர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை கொள்ளை
    X

    விழுப்புரத்தில் நகராட்சி ஊழியர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை கொள்ளை

    விழுப்புரத்தில் நகராட்சி ஊழியர் வீட்டின் கதவை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    விழுப்புரம், மார்ச்.8-

    விழுப்புரம் பூந்தோட்டம் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 47). இவர் விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராணி (40), இவர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரு கிறார்.

    இந்த நிலையில் மேல்மலையனூர் அங்காளம்மன்கோவிலில் நடந்த அமாவாசையை தொடர்ந்து பாதுகாப்பு பணிக்காக ராணி சென்று விட்டார். ரவி மட்டும் வீட்டில் இருந்தார். நேற்று இரவு ரவியும் வீட்டை பூட்டி வெளியே சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் நள்ளிரவில் ரவி வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.

    இன்று அதிகாலை வீட்டுக்கு வந்த ரவி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பொருட்கள் அனைத்து ஆங்காங்கே சிதறி கிடந்தன.

    பீரோவில் வைக்கப் பட்டு இருந்த 30 பவுன் நகையும் கொள்ளை போய் இருந்தது. உடனே இது குறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    மேலும் போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு அங்கிருந்து விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே போய் நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அவர் கள் ரேகைகளை பதிவு செய்தனர்.

    நகராட்சி ஊழியர் ரவி வீட்டின் கதவை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    Next Story
    ×