search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி-முக ஸ்டாலினை விமர்சிக்க முதல்வருக்கு எந்த அருகதையும் இல்லை- உதயநிதி ஸ்டாலின் பேச்சு
    X

    கருணாநிதி-முக ஸ்டாலினை விமர்சிக்க முதல்வருக்கு எந்த அருகதையும் இல்லை- உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    தி.மு.க. குடும்ப கட்சி என்று விமர்சிக்க முதல்வருக்கு எந்த அருகதையும் இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். #udhayanidhistalin #mkstalin #edappadipalanisamy

    கரூர்:

    கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில், மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் கரூர் சி.எஸ்.ஐ. விளையாட்டு மைதானத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நலத்திட்ட உதவிகள்- பரிசு வழங்கும் நிகழ்ச்சி என கூறிவிட்டு மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி இளைஞர்களை திரட்டி சாதுரியமாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டதை பார்க்கிறேன். அரவக்குறிச்சியில் மு.க.ஸ்டாலின் யாரை வேட்பாளராக அறிவிக்கிறாரோ? அவரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    உங்களின் வெற்றி விழாவிலும் என்னை அழைக்க வேண்டும். இளைஞர்களின் எழுச்சியை பார்க்கும்போது தி.மு.க.வின் வெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்டது.

    தி.மு.க.வின் ஊராட்சி சபை கூட்டத்தில் மக்களின் எழுச்சியை பார்த்து தமிழக முதல்-அமைச்சருக்கு எரிச்சல் ஏற்படுகிறது. இதன் காரணமாக தி.மு.க. குடும்ப கட்சி என்று விமர்சனம் செய்கிறார். குழந்தையை போன்று தவழ்ந்து சென்று முதல்வர் பதவியை பெற்ற உங்களுக்கு (முதல்வருக்கு) கருணாநிதி பற்றியோ, உழைப்புக்காக கருணாநிதியால் பாராட்டு பெற்ற தலைவர் மு.க.ஸ்டாலினை பற்றியோ விமர்சிக்க எந்த அருகதையோ, தகுதியோ கிடையாது.

    தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு மானம் கெட்ட கூட்டணி உருவாகியுள்ளது. நான் கட்சிக்காக உழைக்க தயாராக இருக்கிறேன். உங்களில் ஒருவனாக இருந்து கடைசி வரை கட்சிக்காக உழைப்பேன்.

    தி.மு.க. ஆட்சியில் இல்லா விட்டாலும் மக்களுக்காக உழைக்கும் இயக்கம். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். முதல்வர் நாற்காலியில் மு.க. ஸ்டாலின் அமருவார். ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். ஊராட்சி சபை கூட்டங்களின் மூலம் குறைகளை கேட்டறிந்து, அதனை பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் சேர்த்து நிறைவேற்றித் தருவோம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 திலும் தி.மு.க. வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் விரோத அ.தி.மு.க., பா.ஜ.க. அரசின் வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என இளைஞர்கள் சூளுரை ஏற்க வேண்டும். தற்போது கூடிய இளைஞர்களை பார்க்கையில் விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாகி விட்டது. கரூர் மாவட்டத்துக்கு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வர முடியாத பாராளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பித்துரை, அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோருக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றார். #udhayanidhistalin #mkstalin #edappadipalanisamy

    Next Story
    ×