search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அந்தியோதயா ரெயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு- பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
    X

    அந்தியோதயா ரெயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு- பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

    அந்தியோதயா ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரம்-நெல்லை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலை (1619/16192) நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என ரெயில்வேதுறை அமைச்சர் பியூஸ்கோயலிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று அந்தியோதயா ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி தற்போது மாலை 5.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும், மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக மறுநாள் மதியம் 1 மணிக்கு நெல்லை வந்தடையும்.

    இந்த ரெயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்துள்ளதால், நாகர்கோவிலில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.45 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும். இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி விரைவில் நடைபெறும்.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    ரெயில் நீட்டிப்பு செய்து உத்தரவிட்ட ரெயில்வே அமைச்சருக்கும், நடவடிக்கை மேற்கொண்ட மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணனுக்கும், குமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக சங்க தலைவர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×