search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை சட்டசபை நாளை கூடுகிறது- நாராயணசாமி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார்
    X

    புதுவை சட்டசபை நாளை கூடுகிறது- நாராயணசாமி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார்

    புதுவை சட்டசபை நாளை கூடுகிறது. முதல்-அமைச்சர் நாராயணசாமி 4 மாதத்திற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். #puducherryassembly #Narayanasamy

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையின் சிறப்பு கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி நடந்தது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மீண்டும் புதுவை சட்டசபை நாளை (சனிக்கிழமை) மீண்டும் கூடுகிறது. காலை 11 மணிக்கு கூடும் சட்டசபையில் பயங்கரவாத தாக்குதலில் பலியான 40 ராணுவ வீரர்கள், முன்னாள் எம்.எல்.ஏ. சீத்தாவேதநாயகம் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது.

    தொடர்ந்து திருத்திய பட்ஜெட் மதிப்பீட்டிற்கு சபையின் ஒப்புதல் பெறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி 4 மாதத்திற்கான இடைக்கால பட்ஜெட்டை சபையில் தாக்கல் செய்கிறார்.

    இதைத்தொடர்ந்து சட்டசபை ஒத்தி வைக்கப்படுகிறது. வழக்கமாக ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் புதுவை சட்டசபையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    ஆனால், நடப்பாண்டில் பாராளுமன்ற தேர்தல் குறுக்கிடுவதால் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    தொடர்ந்து ஜூன் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நாளை கூட உள்ள சபையில் காங்கிரஸ் எம்.எல். ஏ.க்களுக்கு பேரம் பேசியதாக எழுந்துள்ள புகார், கவர்னர் மாளிகை முன்பு நடந்த தர்ணா, கட்டாய ஹெல்மெட் விவகாரம், பிளாஸ்டிக் தடை, திட்டங்களை செயல்படுத்தாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளது. #puducherryassembly #Narayanasamy

    Next Story
    ×