search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்ட்ரல், திருச்சி ரெயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை
    X

    சென்ட்ரல், திருச்சி ரெயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

    சென்னை சென்ட்ரல், திருச்சி உள்ளிட்ட 36 முக்கிய ரெயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க இந்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல், திருச்சி, டெல்லி, மும்பை சென்ட்ரல், ஹவுரா, அலகாபாத், லக்னோ, குவாஹட்டி, செகந்திராபாத், விசாகப்பட்டினம், புவனேஷ்வர், புனே, மைசூரு, ஜெய்ப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை தொடர்ந்து ரெயில் நிலையங்களில் பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது.

    சுற்றுச்சூழலை பாதுகாக் கும் வகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க ரெயில் பயணிகளுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தாமல் அவற்றிற்கு பதிலாக மாற்று பொருட்களுளை உபயோகிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

    அதன் ஒரு பகுதியாக ‘ஐ.எஸ்.ஏ. 14001’ தர சான்றிதழ் பெறுவதற்காக 36 ரெயில் நிலையங்களில் 5 சதவீத நிலையங்களை கண்டறிந்து தூய்மைப் பணி, குடிநீர் வசதி, மின்சார சிக்கன நடவடிக்கை போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது.ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள், பார்வையாளர்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க சுகாகாரத்துறை மூலம் கண்காணிக்கப்படுவார்கள். ரெயில் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமராவை பயன்படுத்தி கண் காணித்து இத்திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக் கப்படுகிறது.

    முதலில் 36 ரெயில் நிலையங்களை நவீனப்படுத்தும் வகை யில் இத் திட்டம் நிறை வேற்றப்படுகிறது. ரெயில் நிலையங்களில் திடக்கழிவு பொருட்களையும் பிளாஸ் டிக் பொருட்களையும் தவிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்து ஐ.எஸ்.ஒ. 14001 தர சான்றிதழை பெறுவதே ரெயில்வே துறையின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இத்திட்டத்தை செயல் படுத்த நோடல் ஆபீசர் நியமிக்கப்பட இருக்கிறார்கள். ரெயில் நிலையங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், பிளாட்பாரங்கள், உடனுக்குடன் சுத்தம் செய் யப்பட வேண்டும், உறை கழிவுகள், திண்பண்டங்களின் கவர்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களுக் கும் தடை விதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால் ரெயில் நிலையங்கள் தூய்மையாகிவிடும் என்ப தோடு மட்டுமின்றி சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படும் என்பது உறுதி.

    Next Story
    ×