search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சிபுரத்தில் நாளை அண்ணா-கருணாநிதி சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
    X

    காஞ்சிபுரத்தில் நாளை அண்ணா-கருணாநிதி சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

    காஞ்சிபுரத்தில் அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். #MKStalin

    காஞ்சிபுரம்:

    சின்ன காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் அறிஞர் அண்ணா நடத்தி வந்த திராவிட நாடு பத்திரிகைக்கு சொந்தமான கட்டிடத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் முழுஉருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை திறந்து வைக்கிறார்.

    முன்னதாக காஞ்சிபுரம் அடுத்த சேக்காங்குளம் பகுதியில் ஒன்றியச் செயலாளர் சிறுவேடல் செல்வம் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள 20 அடி உயர பிரமாண்டமான கல்வெட்டினை திறந்து வைத்து 95 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியை ஏற்றுகிறார். இதேபோல் காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே கல்வெட்டினை திறந்து கட்சி கொடியை ஏற்றுகிறார்.

    இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் காந்தி சாலை தேரடி பகுதியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. மேற்பார்வையில் பிரமாண்டமான மேடை அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன.

    இதையொட்டி காஞ்சிபுரம் நகரம் முழுவதும் தி.மு.க. கொடிகளும் தோரணங்களும் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரியார், அண்ணா, கருணாநிதி மற்றும் முக. ஸ்டாலின் ஆகியோரின் உருவங்கள் வண்ண விளக்குகளால் கண்ணை கவரும் விதத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    நிகழ்ச்சிகளுக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார். நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் வரவேற்புரை நிகழ்த்துகிறார். சி.வி.எம். அ.சேகரன், எழிலரசன் எம்.எல்.ஏ., தசரதன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். #MKStalin

    Next Story
    ×