search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை - கஞ்சா, செல்போன்கள் சிக்கியது
    X

    மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை - கஞ்சா, செல்போன்கள் சிக்கியது

    மதுரை மத்திய சிறையில் போலீசார் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா, செல்போன் ஆகியவை சிக்கியது.

    மதுரை:

    மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு கஞ்சா, புகையிலை பொருட்கள், செல்போன், பீடிக்கட்டுகள் தாராளமாக கிடைப்பதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து மதுரை சரக சிறைத்துறை துணைத்தலைவர் பழனி, கண்காணிப்பாளர் ஊர்மிளா மற்றும் திலகர் திடல் உதவி ஆணையர் வெற்றிசெல்வம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை 6 மணியளவில் மதுரை மத்திய சிறைக்கு வந்தனர்.

    அங்கு கைதிகளின் அறைகள், சமையல்கூடம், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர்.

    அப்போது கைதிகள் மறைத்து வைத்து இருந்த கஞ்சா, செல்போன், பீடிக்கட்டுகள் ஆகியவை சிக்கின. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறைக்குள் தாராளமாக கிடைப்பது சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தது.

    மதுரை மத்திய ஜெயிலுக்கு வரும் உறவினர்கள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகே கைதிகளை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

    இத்தகையநிலையில் கைதிகளுக்கு போதைப் பொருட்கள் மற்றும் செல்போன்கள் ஆகியவை எப்படி கிடைத்தது? என்று தெரியவில்லை.

    இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் சோதனையில் பிடிபட்ட கைதிகளிடம் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×