search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் அருகே சுவரில் துளையிட்டு நகைக்கடையில் ரூ.4 லட்சம் நகை கொள்ளை
    X

    திருவாரூர் அருகே சுவரில் துளையிட்டு நகைக்கடையில் ரூ.4 லட்சம் நகை கொள்ளை

    திருவாரூர் அருகே சுவரில் துளையிட்டு நகைக்கடையில் ரூ.4 லட்சம் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தன்ராஜ். இவர் திருவாரூர் அருகே மாங்குடியில் கடந்த 5 ஆண்டுகளாக ‘ஜெய் பவாள்’ என்ற பெயரில் நகை கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். திருவாரூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இன்று காலை தன்ராஜின் நகைக்கடையில் பின்பக்கம் சுவரில் துளையிடப்பட்டு இருந்ததை அங்கு நின்ற சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி நகை கடை உரிமையாளர் தன் ராஜிக்கு தகவல் கொடுத்தனர்.

    இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே விரைந்து நகைக்கடைக்கு வந்தார். அப்போது கடையை திறந்து பார்த்த போது பின்பக்க சுவரில் துளையிட்டு மர்ம கும்பல் கடைக்குள் புகுந்து நகையை திருடி சென்றது தெரிய வந்தது.

    கடையில் இருந்த 8 கிலோ வெள்ளி மற்றும் 30 கிராம் தங்க நகையை மர்ம கும்பல் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

    இதுபற்றி திருவாரூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து நகைக்கடைக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர்.

    நகைக்கடை சுவரில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு 2 அடி அளவில் துளை போட்டு இருப்பதை போலீசார் பார்த்து விசாரணை நடத்தினர். இந்த கொள்ளையில் திருவாரூர் பகுதியை சேர்ந்தவர்களே ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகிறார்கள்.

    மேலும் கடையில் இருந்த சிசிடிவி கேமிராவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் கேமிராவில் பொருந்தப்பட்டு இருந்த ஹார்ட் டிஸ்க்கையும் கொள்ளையர்கள் எடுத்து சென்று விட்டது தெரிய வந்தது.

    நகைக்கடையில் சுவரில் துளையிட்டு நகையை கொள்ளையடித்த சம்பவம் திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×