search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள கருணாநிதி சிலை.
    X
    மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள கருணாநிதி சிலை.

    ஈரோட்டில் இன்று மாலை பிரமாண்ட விழா- கருணாநிதி சிலையை ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

    ஈரோட்டில் இன்று மாலை நடைபெற உள்ள பிரமாண்ட விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். #DMK #Karunanidhi #MKStalin
    ஈரோடு:

    தி.மு.க. முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. வீதியில் அமைக்கப்பட்டுள்ளது.

    கருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.

    விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    முன்னதாக ஈரோடு வரும் மு.க.ஸ்டாலினுக்கு ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முத்துசாமி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    மு.க.ஸ்டாலின் ஈரோடு வருகையையொட்டி ஈரோடு மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களான திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    சிலை திறப்பு விழாவில் கட்சி முக்கிய பிரமுகர்கள், கூட்டணி கட்சி பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள். #DMK #Karunanidhi #MKStalin
    Next Story
    ×