search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
    X

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

    கருத்துகணிப்புகளை பொய்யாக்கி பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #ministerkadamburraju #admk #parliamentelection

    கோவில்பட்டி:

    விளாத்திகுளத்தில் இசை மாமேதை நல்லப்ப சுவாமிகளுக்கு ரூ. 20 லட்சத்தில் நினைவுத் தூண் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் அப்படியே பிரதிபலிக்கும் என்பது எந்த காலத்தில் நடந்துள்ளது. சென்ற பாராளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என எந்த கருத்து கணிப்பிலும் வரவில்லை.

    ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக அ.தி.மு.க. தனியாக போட்டியிட்டு 37 இடங்களில் வெற்றி பெற்றது. கருத்துக் கணிப்புகள் எல்லாம் பொய்யாக்கி அ.தி.மு.க. தான் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்றது என்ற வரலாற்றை இந்த முறையும் உருவாக்குவோம்.

    கோடநாடு விவகாரத்தில் முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்த நேரத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்கள். மேலும் ரூ. 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மானநஷ்ட வழக்கு தொடர்ந்து மேற்கொண்டு அது தொடர்பாக பேசக்கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    உயர் நீதிமன்றம் அந்த வழக்கை ஏற்றுக் கொண்டு கோடநாடு சம்பந்தமாக ஊடகத்தில் பேட்டி எதுவும் தரக்கூடாது என தடை விதித்துள்ளது. இதில் முதல்வருக்கு துளிகூட சம்பந்தம் இல்லை என நிரூபித்துள்ளார்.

    இன்றைக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விவரம் இல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளார். நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஆனால் அவர்கள் கவர்னர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். அரசு ஊழியர்- ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிச்சயமாக அரசு ஏற்றுக் கொள்ளும். அதற்குரிய பேச்சு வார்த்தைக்கான பணிகளை அரசு செய்து வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் கூறினார். #ministerkadamburraju #admk #parliamentelection

    Next Story
    ×