search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர்களுக்கு பாடம் நடத்திய தற்காலிக ஆசிரியர்.
    X
    மாணவர்களுக்கு பாடம் நடத்திய தற்காலிக ஆசிரியர்.

    ஆசிரியர்கள் ஸ்டிரைக் எதிரொலி- திருப்பூர் பள்ளியில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்த பெற்றோர்

    ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் திருப்பூர் பள்ளியில் 2 தற்காலிக ஆசிரியர்களை பெற்றோரே நியமித்துள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் சின்னிய கவுண்டன் புதூரில் மாநகராட்சி தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக கடந்த 3 நாட்களாக ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை.

    முதல் நாளன்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து விட்டனர். இதனால் மாணவர்களின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து ஆசிரியர் பயிற்சி முடித்த 2 ஆசிரியர்களை மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க நியமனம் செய்வது என முடிவு செய்தனர்.

    அதன்படி 2 ஆசிரியர்களை தற்காலிகமாக நியமனம் செய்தனர். இதனையடுத்து தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகின்றனர்.
    Next Story
    ×