search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே தகராறு தொடங்கி விட்டது: புகழேந்தி
    X

    ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே தகராறு தொடங்கி விட்டது: புகழேந்தி

    ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இடையே தகராறு தொடங்கி விட்டது. அது விரைவில் வெளி உலகத்திற்கு தெரிய வரும் என்று புகழேந்தி கூறினார். #Pugazhendhi #OPS #EPS
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம் பண்ணையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செய்தி தொடர்பாளா புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சசிகலா கொடுத்த பதவியை தவறாக பயன்படுத்திய துரோகி எடப்பாடி. எங்கள் பொதுக்கூட்டங்களுக்கு தொண்டர்கள், பொது மக்களை காசு கொடுத்து அழைத்து வரவில்லை. அவர்களாக வருகின்றனர்.

    ஆனால் முதல்வர் சாத்தூர் வந்த போது கட்சியினரும், போலீசாரும் மட்டுமே இருந்தனர். பொது மக்கள் யாரும் செல்லவில்லை. தேர்தல் வந்தால் யாருக்கு டெபாசிட் கிடைக்காது என்பதை பொது மக்கள் தீர்மானிப்பார்கள்.

    எடப்பாடி தொகுதியில் பழனிசாமி மீண்டும் போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்கமாட்டார். துரோகம் செய்ய எங்களுக்கு தெரியாது.

    தினகரன் கட்சிக்காக பாடுபட்டது குறித்து உடனிருந்த துணை முதல்வர் பன்னீருக்கு நன்றாக தெரியும். தினகரன் ஜெயிலுக்கு போனாரா என கேட்கும் முதல்வர் எத்தனை முறை ஜெயிலுக்கு சென்றுள்ளார்.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஜெயிக்க முடியாது என அமைச்சர் உதயகுமார் கூறியதால் இடைதேர்தல் நடத்த தமிழக அரசு நாதியற்ற அரசாக உள்ளது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இடையே தகராறு தொடங்கி விட்டது விரைவில் வெளி உலகத்துக்கு அது தெரிய வரும்.

    கொடநாடு கொலைக்கான காரணம் விசுவரூபம் எடுத்து வருகிறது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன்னை குற்றமற்றவன் என தமிழக மக்களுக்கு, எடப்பாடி பழனிசாமி நிரூபிக்க வேண்டும். முதல்வரை கொலைகாரனாக மக்கள் பார்க்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து ஏழாயிரம்பண்ணையில் நடந்த பொதுக்கூட்டத்தில் புகழேந்தி பேசியதாவது:-

    இடைத்தேர்தல்களை சந்திக்க அ.தி.மு.க., தி.மு.க., தயாராக இல்லை. திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் ஸ்டாலின் வேட்பாளர் வெற்றி பெறமுடியாது என கட்சியினர் அவரிடம் தெரிவித்ததால் தேர்தல் ஆணையத்திடம் தேர்தலை தள்ளி போடச் சொல்லி மனு கொடுத்தனர்.

    8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பட்டாசு தொழிலை காப்பாற்ற அ.தி.மு.க அரசு முயற்சி செய்யவில்லை. சிவகாசி முன்னாள் எம்.பி.யாக இருந்த வைகோ எதற்கெல்லாமோ குரல் கொடுக்கிறார்.

    தன்னை தோற்கடித்த தொகுதி என்பதாலோ என்னவோ பட்டாசு ஆலைகள் மூடப்பட்டிருப்பது குறித்து குரல் கொடுக்கவில்லை.

    ஆனால் பட்டாசு தொழில் அழிந்து விடக்கூடாது என்பதை தினகரன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கொடநாடு கொலை வழக்கில் முதல்வர் ஜெயிலுக்கு போவது உறுதி.

    ஜி.எஸ்.டி.யால் பொருளாதாரம் சீரழிந்துள்ளது. மோடியை எதிர்க்க தி.மு.க. தலைவர் கூடப் பயப்படுகிறார். ஆனால் எத்தனை வழக்குகள் போட்டாலும் மோடியை தைரியமாக எதிர்க்க கூடிய தலைவர் தினகரன் மட்டுமே.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிக இடங்களில் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Pugazhendhi #OPS #EPS
    Next Story
    ×