search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வண்ணாரப்பேட்டை - விமான நிலையத்துக்கு மெட்ரோ ரெயில் கட்டணம் 70 ரூபாய்
    X

    வண்ணாரப்பேட்டை - விமான நிலையத்துக்கு மெட்ரோ ரெயில் கட்டணம் 70 ரூபாய்

    வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல், எல்.ஐ.சி. வழியாக விமான நிலையத்துக்கு மெட்ரோ ரெயில் பயண கட்டணம் ரூ.70ஆக நிர்ணயிக்கப்படுகிறது. #MetroTrain #ChennaiMetro

    சென்னை:

    சென்னை மாநகர போக்கு வரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்- சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை ஏற்கனவே நடந்து வருகிறது.

    டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை ரெயில் வழித்தடப் பணிகள் தற்போது நிறைவு பெற்று ஆய்வு பணிகள் நடந்து வருகிறது.

    வண்ணாரப்பேட்டை - விமான நிலையத்துக்கு சென்ட்ரல், எல்.ஐ.சி., அண்ணாசாலை வழியாக நேரடி மெட்ரோ ரெயில் சேவை இன்னும் 10 நாட்களில் தொடங்கப்படுகிறது.

    சமீபத்தில் வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ். வழித்தடத்தில் தண்டவாளங்கள், சிக்னல்கள், காற்றோட்டம், வெளிச்சம், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு நடத்தினார்.

    80 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாக நடந்தது.

    இந்த வழித்தட பாதைக்கு பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் வழங்கியதும் 10 நாட்களில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படுகிறது. வண்ணாரப்பேட்டை - விமான நிலையத்துக்கு சென்ட்ரல், எல்.ஐ.சி., அண்ணாசாலை வழியாக இயக்கப்படும் மெட்ரோ ரெயில் கட்டணம் ரூ.70ஆக நிர்ணயிக்கப்படுகிறது.

    தூரத்துக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. 2 கி.மீட்டர் வரை 10 ரூபாய், 2-4 கி.மீட்டர் 20 ரூபாய், 4-6 கி.மீட்டர் 30 ரூபாய், 6-10 கி.மீட்டர் 40 ரூபாய், 10-15 கி.மீட்டர் 50 ரூபாய், 15-20 கி.மீட்டர் 60 ரூபாய், 20-50 கி.மீட்டர் 70 ரூபாய் என மெட்ரோ நிர்வாகம் நிர்ணயித்துள்ளது.

    இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

    Next Story
    ×