search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடியை பிரதமராக ஏற்கும் கட்சிகளுடன் பா.ஜனதா கூட்டணி - தமிழிசை
    X

    மோடியை பிரதமராக ஏற்கும் கட்சிகளுடன் பா.ஜனதா கூட்டணி - தமிழிசை

    மோடியை பிரதமராக ஏற்கும் கட்சிகளுடன் பா.ஜனதா கூட்டணி அமைக்கும் என்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக பா.ஜனதா பொறுப்பாளராக பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் தமிழக மூத்த தலைவர்கள் அமர்ந்து என்னென்ன விதத்தில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற முழு திட்டமிடலை உணர்த்தி வந்திருக்கிறோம்.

    பியூஸ் கோயல் தமிழக பா.ஜனதாவோடு முழுமையாக ஒத்துழைத்து எங்களுக்கு வழிகாட்டி எங்களையும் அவரோடு இணைத்து வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்கிறேன் என்று உறுதிப்பாட்டை சொல்லி இருக்கிறார். மிகுந்த உற்சாகத்தோடு நாங்கள் டெல்லியில் இருந்து வந்திருக்கிறோம்.

    பா.ஜனதா மாநில தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் மூலம் ஒவ்வொரு தொகுதிக்கு என்று முழு நேர ஊழியர்கள் போட்டிருக்கிறோம். அவர்களையும் பியூஸ் கோயல் சந்தித்தார்.

    அப்போது தமிழகத்தில் அமித்ஷாவின் கூட்டத்திற்கும், காணொலி காட்சி மூலமாக நடைபெறும் கூட்டத்திற்கும் தமிழகத்தில் நல்ல ஆதரவு பெருகி வருகிறது என்பதற்கும் அவர் எங்களுக்கு பாராட்டை தெரிவித்தார்.

    தமிழகத்தில் தேசிய கட்சியாக இருக்கும் பா.ஜனதா மட்டும்தான் பலம் பெற முடியும். இன்றைய கால கட்டத்தில் தமிழகத்தின் அரசியலில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தாக்கம் இருக்கும். எவ்வளவுதான் தாக்கி பேசினாலும் எங்களின் தாக்கம் இருக்கும். வரும் காலத்தில் ஒரு வழிகாட்டும் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி இருக்கும்.

    கவர்னரை மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்க செல்கிறார். அவர் கவர்னரை கருப்பு கொடியுடன் சென்று சந்திப்பாரா அல்லது கருப்பு கொடி இல்லாமல் சந்திப்பாரா?. ஆளுனர் அரசுக்கு இடையூறு இல்லாமல் மக்களுக்கான திட்டங்களுக்காக மக்களிடம் சென்று மனு வாங்கினால் ஊருக்கு ஊர் கருப்புக்கொடி காண்பித்தார்கள். இன்று ஆளுநர்தான் தலைவர் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். சட்டப்படி இதை அணுகுவோம் என்று தமிழக அரசும், முதல்- அமைச்சரும் சொல்லி இருக்கிறார்கள். சட்டப்படி அணுகட்டும்.

    இதில் நீங்கள் யாரோ தொடுத்த ஒரு குற்றச்சாட்டை வைத்து அரசியல் செய்கிறீர்கள். வழக்கை திசை திருப்ப குற்றவாளிகள் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை கூறலாம். எதிர்க்கட்சி தலைவர் அதை ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டாக எடுத்துக் கொண்டு விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

    அப்படிப் பார்த்தால் 2ஜியில் ஆரம்பித்து எவ்வளவு உயிரிழப்புகள் நடைபெற்றது என்பதை எதிர் விவாதமும் செய்யலாம். சட்டப்படி விசாரணை நடை பெறட்டும். சட்டப்படி யார் குற்றமற்றவர்களோ அது வெளியே தெரியட்டும். ஆனால் குற்றச்சாட்டு வந்த உடனேயே நீங்கள் எம்பி குதிப்பது, ஏதோ குதித்து அரசாங்கத்தில் இருந்து விடலாம் என்ற ஒரு மனப்பால் குடிப்பதாகத்தான் நான் எடுத்துக் கொள்கிறேன்.

    தி.மு.க. ஆட்சி செய்யும் போது மு.க.ஸ்டாலின் எல்லாவற்றக்கும் மத்திய அரசிடம் விசாரணைக்கு கொடுத்தாரா? எனவே அவர்கள் நம்பிக்கையோடு சட்ட ரீதியாக அணுக வேண்டும்.

    பியூஸ் கோயலுடன் சந்திப்பு என்பது பா.ஜனதாவின் வெற்றிக்கான அச்சாரமாக அமையும். அந்த வெற்றிக்கான அச்சாரத்தில் கூட்டணிக்கான அச்சாரமும் ஒன்று. அது மட்டுமே ஒரு அச்சசரமாக எடுக்க முடியாது.

    பியூஸ் கோயல் மிக திறமைசாலி. பல மாநிலங்களுக்கு பொறுப்பாளராக இருந்து வெற்றியை தேடித் தந்தவர். எனவே சவாலான இந்த மாநிலத்துக்கு அந்த சவாலான ஒரு அமைச்சரை அமித்ஷா நியமித்திருக்கிறார். அவருடன் சி.டி.ரவி இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர்கள் இருவரும் நிச்சயமாக தமிழகத்தில் வெற்றியை தேடித்தருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத நல்லாட்சியை விரும்புகின்ற, மோடியை பிரதமராக ஏற்றுக் கொள்கின்ற, இந்த நாட்டின் வளர்ச்சி திட்டம்தான் தேவை என்று அசராத நம்பிக்கை உள்ள எந்த கட்சியோடு வேண்டுமானாலும் நாங்கள் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துவோம்.

    கூடா நட்பு கேடாய் முடியும் என்ற தகவல் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதை ஒரு கூட்டணி கட்சி கூட ஆமோதிக்கவில்லை.

    Next Story
    ×