search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தூரில் 15 வயது சிறுமிக்கு திருமணம்- கர்ப்பமானதால் உடல்நலம் பாதிப்பு
    X

    சாத்தூரில் 15 வயது சிறுமிக்கு திருமணம்- கர்ப்பமானதால் உடல்நலம் பாதிப்பு

    15 வயது சிறுமிக்கு திருமணம் செய்ததாக பெற்றோர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கே.முத்துச்சாமி புரத்தை சேர்ந்தவர் வீரபாண்டி- அமுதா தம்பதியின் 17 வயது மகனுக்கும் மாரியப்பன்- சுப்பம்மாள் தம்பதியின் 15 வயது மகளுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

    திருமணத்திற்கு பின்னர் சிறுமி கர்ப்பமுற்ற நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிறுமியை டாக்டர்கள் பரிசோதித்தனர். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு கடந்த 6-ந் தேதி சிறுமிக்கு கரு கலைப்பு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தெரியவந்ததும், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விசாரணை நடத்தி மாவட்ட சமூக நல அதிகாரி ராஜத்திற்கு தகவல் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் சாத்தூர் யூனியன் விரிவாக்க அலுவலர் விஜயலட்சுமி சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து குழந்தை திருமணம் செய்து வைத்த தாக சிறுமியின் பெற்றோர் மாரியப்பன்- சுப்பம்மாள், சிறுவனின் பெற்றோர் வீரப்பாண்டி- அமுதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×