search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணத்தில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி- ஆடைகளுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடி
    X

    கும்பகோணத்தில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி- ஆடைகளுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடி

    மத்திய கைத்தறி ஜவுளி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு கைத்தறி துறை இணைந்து நடத்தும் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி கும்பகோணத்தில் தொடங்கியது. #HandloomExhibition
    கும்பகோணம்:

    மத்திய கைத்தறி ஜவுளி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு கைத்தறி துறை இணைந்து நடத்தும் மாநில அளவிலான  கைத்தறி கண்காட்சி கும்பகோணத்தில் தொடங்கியது. ஜனவரி 11ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் ஈரோடு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் தயாரிக்கப்பட்ட கைத்தறி ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    கைத்தறி துணி வகைகளுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கண்காட்சி மூலம் 50 லட்சம் மதிப்புள்ள கைத்தறி ஆடைகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். #HandloomExhibition
    Next Story
    ×