search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மேட்டூர் அணை நீர் மட்டம் 14 நாளில் 13 அடி சரிவு

    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. #MetturDam
    மேட்டூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

    நேற்று 503 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 561 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 88.1 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 87.47 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
    Next Story
    ×