search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்புசுவர் மீது மோதிய கார் சேதமடைந்திருப்பதை படத்தில் காணலாம்.
    X
    தடுப்புசுவர் மீது மோதிய கார் சேதமடைந்திருப்பதை படத்தில் காணலாம்.

    சின்னசேலத்தில் விபத்து - கல்பாக்கம் அணுமின் நிலைய அதிகாரி உள்பட 4 பேர் பலி

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே இன்று அதிகாலை தடுப்பு சுவர் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #ChinnaSalemAccident
    கள்ளக்குறிச்சி:

    காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம் டவுன்ஷிப்பை சேர்ந்தவர் தேவநாதன் (வயது 50). இவர் சென்னை கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் சுற்றுசூழல் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.

    இவர் தனது மனைவி மாலினி(45), மகள் ரம்யா(26) ஆகியோருடன் காரில் சேலம் செல்ல முடிவு செய்தார்.

    அதன்படி இன்று அதிகாலை ஒரு மாருதி காரில் தேவநாதன் தனது குடும்பத்தினருடன் சேலம் புறம்பட்டார். காரை பாபு என்ற முஜிபுர்(38) என்பவர் ஓட்டினார்.

    இன்று காலை 8 மணியளவில் அந்த கார் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ரெயில்வே கேட் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென்று கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அங்குள்ள தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

    இதில் காரில் இருந்த தேவநாதன், அவரது மனைவி மாலினி, மகள் ரம்யா, கார் டிரைவர் பாபு ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    பின்னர் விபத்தில் இறந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  #ChinnaSalemAccident
    Next Story
    ×