search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் எதிர்ப்பால் முதல்-அமைச்சர் ஹெலிகாப்டரில் செல்கிறார்- டிடிவி தினகரன்
    X

    மக்கள் எதிர்ப்பால் முதல்-அமைச்சர் ஹெலிகாப்டரில் செல்கிறார்- டிடிவி தினகரன்

    மக்கள் எதிர்ப்பின் காரணமாக முதல்-அமைச்சர் ஹெலிகாப்டரில் வந்து பார்த்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran ##EdappadiPalaniswami #GajaCyclone
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று மன்னார்குடி அருகே உள்ள வடுவூருக்கு வந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. குடிநீர் மின்சாரம், உணவு மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் அவதிப்படுகின்றனர். புயலால் டெல்டா பகுதி மக்களின் வாழ்க்கை முறை 30 ஆண்டுகள் பின் தங்கி சென்று விட்டது. விவசாயிகள் மீனவர்கள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், யானை பசிக்கு சோளப்பொறி கொடுப்பது போல் முதல்- அமைச்சரின் ரூ.1000 கோடி நிவாரண தொகை அறிவிப்பு உள்ளது.

    பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

    தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கையால் அமைச்சர்களை மக்கள் விரட்டி அடிக்கிறார்கள். மாவட்ட கலெக்டர்கள் அமைச்சரின் பின்னால் சென்று கொண்டிருக்கிறார்களே தவிர பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரிகள் யாரும் செல்லவில்லை.

    ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உணவுத்துறை, கைத்தறித்துறை, விவசாய துறை என 3 அமைச்சர்கள் இருந்தும் விவசாயிகளும் மக்களும் உணவு இல்லாமல், உடை இல்லாமல் முகாம்களில் அடைப்பட்டு கிடக்கிறார்கள். மக்கள் எதிர்ப்பின் காரணமாக முதல்-அமைச்சர் ஹெலிகாப்டரில் வந்து பார்த்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. செயலற்ற முதல்- அமைச்சர் மக்களை சந்திக்க அச்சப்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran ##EdappadiPalaniswami #GajaCyclone
    Next Story
    ×