search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 101.2 அடியாக உயர்வு

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று 100.96 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 101.2 அடியாக உயர்ந்தது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு கடந்த 6 மாதங்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 4 ஆயிரத்து 782 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 5 ஆயிரத்து 172 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீரும், கால்வாயில் 650 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வந்தது. இன்று காலை முதல் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 300 கன அடியாக குறைக்கப்பட்டது.

    டெல்டா பாசனத்திற்கு காவிரி ஆற்றில் தொடர்ந்து 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 100.96 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 101.2 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
    Next Story
    ×