search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் செல்லவில்லை- பிரேமலதா குற்றச்சாட்டு
    X

    புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் செல்லவில்லை- பிரேமலதா குற்றச்சாட்டு

    டெல்டா மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் செல்லவில்லை என்று பிரேமலதா குற்றம் சாட்டியுள்ளார். #premalatha #gajacyclone #gajaaffected

    மன்னார்குடி:

    டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா இன்று மன்னார்குடிக்கு வந்தார். கோட்டூரில் புயலால் சேதமான வீடுகள், தென்னை மரங்களை பார்வையிட்டார்.

    கஜா புயலால் டெல்டா பகுதியில் மிகப்பெரிய அழிவு ஏற்பட்டுள்ளது. தென்னை, வாழை, மா, பலா போன்றவை பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு போதிய நிவாரணம் வழங்கவில்லை. மின்சாரம், குடிநீர், உணவு, உடை போன்ற அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.

    அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் யாரும் கிராமத்தினரை நேரடியாக சென்று சந்திக்கவில்லை.

    இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் அங்கு புயல் பாதிப்பு நிவாரண பணிகளை அமைச்சர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். பிற பகுதிகளுக்கு தேர்தல் சமயத்தில் ஒன்று கூடும் ஆளும் கட்சியினர், அமைச்சர்கள் தற்போது வராதது ஏன்?.

    திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டனர். முதல்-அமைச்சர் தனது பயணத்தை மாற்றி அமைத்து உள்ளார். தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் திருவாரூர் மாவட்ட பகுதியில் வெள்ள பாதிப்புகளை கண்டறிவதற்கான பயணத்தை ரத்து செய்துள்ளது. இவர்கள் மீது பொதுமக்கள் கொண்டுள்ள எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது .நகர் முழுவதும் மின் வினியோகம் முழுமையாக சரி செய்யப்படாத நிலையில் பள்ளிக்கூடங்களை அவசர அவசரமாக திறந்து பணிகள் முடிவடைந்ததை முடிவடைந்ததாக கூறுவது கண்துடைப்பு நாடகம்.

    இவ்வாறு அவர் கூறினார். #premalatha #gajacyclone #gajaaffected

    Next Story
    ×