search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை 4ம் வீதியில் ஜெனரேட்டர் மூலம் தொட்டியில் ஏற்றப்பட்ட தண்ணீரை பிடிக்க குடங்களுடன் திரண்ட பொதுமக்கள்
    X
    புதுக்கோட்டை 4ம் வீதியில் ஜெனரேட்டர் மூலம் தொட்டியில் ஏற்றப்பட்ட தண்ணீரை பிடிக்க குடங்களுடன் திரண்ட பொதுமக்கள்

    ஜெனரேட்டர் வாடகை 1 மணி நேரத்திற்கு ஆயிரம் ரூபாய்

    கஜா புயலால் மின்சாரம் முற்றிலும் தடைபட்டுள்ளதால் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் ரூபாய் வாடகையாக பெறப்படுகிறது. #Gaja
    புதுக்கோட்டை மாவட்டத்தை புரட்டிப்போட்ட கஜா புயல் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் மீண்டு வர ஒரு சில வாரம் ஆகலாம் என கூறப்படுகிறது. மழையை தரும் புயல் என்று நம்பியிருந்த நிலையில் மரங்களை வேரோடு பிடுங்கி எறியும் புயலாகவே கஜா இருந்துள்ளது.

    கிராமங்களின் அழகை முற்றிலும் அழித்துள்ள இந்த புயலால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அத்துடன் பெரும்பாலும் வீடுகளில் உணவு சமைப்பது முதல் குளிப்பது வரை பொதுமக்களின் தண்ணீர் தேவைக்கு போர்வெல் கிணறே ஆதாரமாக இருந்தது. ஆனால் தற்போது மின்சாரம் இல்லாததால் மக்கள் முடங்கியுள்ளனர். செல்போன் ரீசார்ஜ் செய்ய கடைவீதிகளில் உள்ள நிறுவனங்களை நாடியுள்ளனர்.

    இந்தநிலையில் புதுக்கோட்டை நகர் பகுதியில் திருக்கோகர்ணம், திலகர்திடல், காமராஜ் நகர் பகுதியில் ஜெனரேட்டர்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. ஒருமணி நேரத்திற்கு ரூ.1000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் இதனை நாடியுள்ளனர்.
    Next Story
    ×