search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு 2,600 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு 2,600 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2,600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. #KarthigaiDeepam #ArunachaleswararTemple
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பரணி தீபம் மற்றும் மகா தீபம் வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஏற்றப்படுகிறது.



    இந்த விழாவை காண தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் அதிகமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருவார்கள்.

    அவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழகங்களில் இருந்து வருகிற 22-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 24-ந் தேதி (சனிக்கிழமை) வரை திருவண்ணாமலைக்கு 2,609 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இதற்காக திருவண்ணாமலையில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, தாம்பரம், சென்னைக்கு 666 பஸ்கள் இயக்கபட உள்ளது.

    அத்தியந்தல் முனை பகுதியில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து ஓசூர், பெங்களூரு, சேலம், திருப்பத்தூர், ஈரோடு, கோவைக்கு 662 பஸ்களும், அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, செய்யாறு பகுதிகளுக்கு 336 பஸ்களும் இயக்கபடுகிறது.

    எஸ்.ஆர்.ஜி.டி.எஸ். பள்ளி மைதானத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து சேத்துப்பட்டு, வந்தவாசி, காஞ்சீபுரத்திற்கு 140 பஸ்களும், அபய மண்டபம் அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து காஞ்சி, மேல்சோழங்குப்பத்திற்கு 20 பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    அதேபோல வேட்டவலம் புறவழிச் சாலை அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து வேட்டவலம், விழுப்புரத்திற்கு 58 பஸ்களும், கம்பன் கல்லூரி எதிரில் உள்ள மைதானத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து திருக்கோவிலூர், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூருக்கு 242 பஸ்கள் இயக்கபட உள்ளன.

    அன்பு நகரில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளுக்கு 264 பஸ்கள் இயக்கபடும். மணலூர்பேட்டை புறவழிச் சாலை அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து மணலூர்பேட்டை, திருக்கோவிலூருக்கு 22 பஸ்களும், நல்லவன்பாளையம் புறவழிச்சாலை அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து தண்டராம்பட்டு, தானிப்பாடி, அரூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளுக்கு 199 பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    கார்த்திகை தீப திருவிழாவையொட்டி வருகிற 22 மற்றும் 23-ந் தேதிகளில் விழுப்புரம், வேலூர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    கார்த்திகை தீபம் அன்று திருவண்ணாமலையில் கார்களை நிறுத்த 77 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு வாகனங்களை நிறுத்த www.tvmpournami.in என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.

    மகாதீப மலையில் ஏறும் பக்தர்கள் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் 22-ந் தேதி அனுமதி சீட்டு பெறவேண்டும். #KarthigaiDeepam #ArunachaleswararTemple



    Next Story
    ×