search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாராபுரத்தில் உல்லாசத்துக்கு வர மறுத்ததால் அண்ணியை கொன்ற வியாபாரி
    X

    தாராபுரத்தில் உல்லாசத்துக்கு வர மறுத்ததால் அண்ணியை கொன்ற வியாபாரி

    உல்லாசத்துக்கு வர மறுத்த அண்ணியை கொன்ற வியாபாரி போலீசில் சரண் அடைந்தார்.

    தாராபுரம்:

    தாராபுரம் நஞ்சியாம் பாளையத்தில் உள்ள உப்பாற்றுபாலத்தில் கடந்த மாதம் 25-ந்தேதி அன்று சாக்குமூட்டையில் இளம்பெண் பிணம் கிடந்தது. இது குறித்து தாராபுரம் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    பிணமாக கிடந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த தாலியில் பி.ஜே. என்ற ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்டிருந்தது. ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் இதுகுறித்து விசாரித்தபோது கடை உரிமையாளர் இந்த தாலி இங்கு செய்யப்பட்டது தான் என்று கூறினார்.

    இதனையடுத்து கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் மாயமான பெண்கள் குறித்து விசாரித்தபோது முருகன் என்பவரது மனைவி முத்துலட்சுமி (வயது 45) மாயமானது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. விசாரணையில் பிணமாக கிடந்தது மாயமான முத்துலட்சுமி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் நேற்று தாராபுரம் கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகர் முன்பு கொலை செய்யப்பட்ட முத்துலட்சுமியின் தங்கை கணவர் வேலுச்சாமி (45) மற்றும் அவரது அக்காள் மகன் குமரேசன் (21) ஆகியோர் நேற்று சரணடைந்தனர். முத்துலட்சுமியை கொலை செய்ததை வேலுச்சாமி ஒப்புக் கொண்டார். இதனையடுத்து தாராபுரம் போலீசில் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர்.

    நான் குடும்பத்துடன் கவுந்தப்பாடியில் வசித்து வருகிறேன். எங்களுடன் எனது மனைவியின் அக்காள் முத்துலட்சுமி அவரது கணவர் முருகனுடன் வசித்து வந்தனர்.

    எனக்கும் மனைவியின் அக்காளுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்துலட்சுமி யை உல்லாசத்துக்கு அழைத்தேன். பேரன், பேத்திகள் வந்துவிட்டனர். இனிமேலும் உல்லாசத்துக்கு வரமுடியாது என்று மறுத்தார். இதனால் ஆத்திரம் ஏற்பட்டது. எனது அக்காள் மகன் குமரேசன் உதவியுடன் வேனில் முத்துலட்சுமியை கடத்தினேன்.

    கவுந்தப்பாடி- சித்தோடு இடையே சென்றபோது உல்லாசம் குறித்து எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் முத்துலட்சுமியை துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். கொய்யா வியாபாரம் செய்யும் என்னிடம் இருந்த சாக்கில் உடலை கட்டி தாராபுரம் உப்பாற்று பாலத்தில் வீசினோம்.

    முத்துலட்சுமியின் கணவர் முருகன் மனைவி மாயமானது குறித்து புகார் அளித்தார். போலீஸ் எங்களை நெருங்கி விட்டதை அறிந்து சரணடைந்தோம் என்று கூறினார்.  இதனையடுத்து வேலுச்சாமியையும் அவரது அக்காள் மகன் முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×