search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 4 ம் வகுப்பு மாணவன் பலி
    X

    விருத்தாசலம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 4 ம் வகுப்பு மாணவன் பலி

    விருத்தாசலம் அருகே மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த 4 ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் 20 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஆனந்தகுடியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் உதயகுமார் (வயது 9).

    இவன் கருவேப்பிலங் குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். இவனுக்கு கடந்த 8-ந் தேதி திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது.

    உடனே அவனை பெற்றோர் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு உதயகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் உதயகுமார் பரிதாபமாக இறந்தான்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு சென்று உதயகுமார் உடலை பார்த்து கதறி அழுதனர். இதைப்பார்க்க பரிதாபமாக இருந்தது.

    ஆனந்தகுடி கிராமத்தில் மேலும் பலர் காய்க்கலால் அவதியடைந்துள்ளனர்.

    அந்த கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணராஜ் (29), பூமாலை (22), அசலாம்பாள் (50), கருணாநிதி (51), செல்வி (30), ஐஸ்வர்யா (7), பத்ராசலம் (70), மிதுலா (5), கனிமொழி (35), கவுதமன் (13) உள்பட 20 பேர் விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஒரே கிராமத்தில் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளதால் அந்த பகுதி பொதுமக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

    Next Story
    ×