search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தருமபுரி, கிருஷ்ணகிரியில் நாளை முதல்  கமல்ஹாசன் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
    X

    தருமபுரி, கிருஷ்ணகிரியில் நாளை முதல் கமல்ஹாசன் 2 நாட்கள் சுற்றுப்பயணம்

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். #KamalHaasan
    கிருஷ்ணகிரி:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாளை (வெள்ளிக்கிழமை) நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    நாளை மதியம் 3.30 மணிக்கு நல்லம்பள்ளியிலும், 4.30 மணிக்கு பாப்பாரப்பட்டியிலும், 5.30 மணிக்கு பாலக்கோட்டிலும், 6.30 மணிக்கு காரிமங்கலத்திலும், இரவு 7 மணிக்கு பெரியாம்பட்டியிலும் நடைபெறும் கூட்டங்களில் வேனில் நின்றபடி பேசுகிறார்.

    இதைத்தொடர்ந்து நாளை இரவு 8 மணிக்கு தர்மபுரி வள்ளலார் திடலில் நடைபெறும் மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசுகிறார்.

    நாளை மறுநாள் (10-ந்தேதி) பிற்பகல் 3.30 மணிக்கு அரூர் ரவுண்டானாவிலும், மாலை 4.30 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானாவிலும், மாலை 5 மணிக்கு மத்தூரிலும், 6 மணிக்கு பர்கூரிலும், 6.30 மணிக்கு கிருஷ்ணகிரியிலும் பேசுகிறார். பின்னர் இரவு 7.30 மணிக்கு ராயக்கோட்டையிலும், 8.30 மணிக்கு ஓசூரிலும் வேன் மூலம் மக்களை சந்தித்து பேசுகிறார். #KamalHaasan
    Next Story
    ×