search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை படத்தில் காணலாம்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை படத்தில் காணலாம்.

    திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த ரூ.8 லட்சம் நகை பறிமுதல்

    திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெண் ஒருவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. #TrichyAirport
    திருச்சி:

    திருச்சி சர்வதே விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல் வெளிநாடுகளில் இருந்து அடிக்கடி தங்கம் கடத்தலும் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஸ்கூட் என்ற தனியார் விமானம் வந்திறங்கியது.

    அதில் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த நஸ்ரின் பானு என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் தனி அறையில் வைத்து சோதனை போட்டனர்.

    இதில் அவர் தனது உடலில் மறைத்து எடுத்து வந்த 244 கிராம் தங்க நகைகள் கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த நகைகளை பறிமுதல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.7 லட்சத்து 83 ஆயிரம் ஆகும்.

    இதைத்தொடர்ந்து நகை கடத்தி வந்த நஸ்ரின் பானுவிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் தனக்காக நகைகளை கடத்தி வந்தாரா? அல்லது வேறு யாருக்காவது நகை கடத்தலில் ஈடுபட்டாரா? என விசாரணை நடக்கிறது.  #TrichyAirport
    Next Story
    ×