search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூரில் 4-வது நாளாக 560 சிலைகளின் உலோக தன்மை குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு
    X

    திருவாரூரில் 4-வது நாளாக 560 சிலைகளின் உலோக தன்மை குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு

    திருவாரூரில் 4-வது நாளாக 560 சிலைகளின் உலோக தன்மை குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். #ArchaeologyDepartment #Tiruvarurtemple

    திருவாரூர்:

    தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருக்கும் சிலைகளின் தன்மை பற்றி சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்யும் படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தொல்லியல் துறையினருடன் இணைந்து சிலைகளின் உண்மை தன்மை பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    முதல்கட்டமாக தஞ்சை பெரிய கோவில், மற்றும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உள்ள சிலைகளை ஆய்வு செய்தனர். நவீன கருவிகளை கொண்டு இந்த சோதனை நடந்தது. மேலும் கோவிலில் உள்ள பழைய ஆவணங்கள்படி சிலைகளின் உயரம், எடை, உலோகத்தின் தன்மை இருக்கிறதா? என்று ஆய்வு செய்து அதை குறிப்பெடுத்து கொண்டனர்.

    திருவாரூர் கோவிலில்

    இதையடுத்து திருவாரூர் தியாகராஜர் கோவிலில் கடந்த மாதம் 21-ந் தேதி முதல்கட்டமாக சிலைகள் ஆய்வு பணிகள் தொடங்கின.

    கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள சுமார் 4635 சிலைகளை சோதனை செய்யும் பணி நடந்தது.

    இதையடுத்து கடந்த 1-ந் தேதி முதல் 2-வது கட்டமாக திருவாரூர் கோவிலில் மீண்டும் ஆய்வு பணி நடைபெற்றது. நேற்றுடன் 3-வது நாளாக நடைபெற்ற இந்த சோதனையில் இதுவரை மொத்தம் 560 சிலைகள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டன.

    சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மலைச்சாமி, பழனிவேல் ஆகியோர் தலைமையில் தொல்லியல் துறையினர் , சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் என 50-க்கும் மேற்பட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த பணிகளை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த நிலையில் சிலைகள் ஆய்வு பணி இன்றும் 4-வது நாளாக தொடர்கிறது.

    இன்று தொல்லியல் துறையினர், தாங்கள் தங்கியிருந்த திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆய்வு பணியை மேற்கொண்டனர். இதில் தொல்லியல் துறையினர், தாங்கள் திருவாரூர் கோவிலில் குறிப்பெடுத்த சிலைகளின் தன்மைகளை, பழைய ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்து அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை ஆய்வு செய்த 560 சிலைகளின் உண்மையான விவரங்களை அறிக்கையாக தயார் செய்து வருகின்றனர். #ArchaeologyDepartment #Tiruvarurtemple

    Next Story
    ×