search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அரசு தவறிவிட்டது- ஜிகே வாசன் குற்றச்சாட்டு
    X

    தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அரசு தவறிவிட்டது- ஜிகே வாசன் குற்றச்சாட்டு

    தமிழக அரசு பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பான அறிவிப்பில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறிவிட்டதாக ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார். #TamilMaanilaCongress #GKVasan
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகைக்கு- பட்டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தற்போதைய தீர்ப்பில் உள்ள விதிமுறைகள் மாற்றப்பட்டு கடந்த காலங்களில் இருந்த நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் அல்லது காலை, மாலை ஆகிய நேரங்களில் கூடுதலான நேரங்களில் பட்டாசு வெடிப்பதற்காக விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

    திடீரென்று புதிய விதிமுறைகளை திணித்து, மக்கள் காலம் காலமாக வழக்கத்தில் கொண்டுள்ள கலாச்சாரத்தை மாற்ற நினைப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    மாசுக்கட்டுப்பாடு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, படிப்படியாக விதிமுறைகளை கொண்டு வந்து, மக்களின் மனநிலைக்கு ஏற்ப இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டுமே தவிர திடீரென்று கட்டாயப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட முன்வரக் கூடாது.

    தமிழக அரசும் பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பான அறிவிப்பில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறிவிட்டது.

    இச்சூழலில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து பொது மக்கள் பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை அதிகப்படுத்திட வேண்டும். குறிப்பாக பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரின் நலன் காக்கவும், பண்டிகையின் கலாச்சாரத்தை பாதுகாக்கவும், பொது மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கவும் உச்சநீதிமன்றம் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #TamilMaanilaCongress #GKVasan
    Next Story
    ×