search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு காய்ச்சலை ஒழிக்க பழைய இரும்பு பொருள்களை வியாபாரிகள் அகற்ற வேண்டும் - விக்கிரமராஜா
    X

    டெங்கு காய்ச்சலை ஒழிக்க பழைய இரும்பு பொருள்களை வியாபாரிகள் அகற்ற வேண்டும் - விக்கிரமராஜா

    டெங்கு காய்ச்சலை ஒழிக்க பழைய இரும்பு பொருள்களை வியாபாரிகள் அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Swineflu #Dengue

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்குவால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் விழிப்புணர்வு முகாம்கள் அரசு சார்பிலும் நடைபெற்று வருகின்றன.

    வணிகர்களாகிய நாமும் நமது பங்களிப்பாக, அனைத்து வியாபாரிகளும் ஒத்துழைப்பு அளித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அரசிடம் இருந்து நிலவேம்பு பொடிகளை வாங்கி கஷாயம் வைத்து பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும்.

    குறிப்பாக பழைய இரும்பு, பழைய பிளாஸ்டிக், பழைய டயர் விற்பனை செய்யும் வியாபாரிகள் அனைவரும் தேவையற்ற பொருட்களை அகற்றி, தங்கள் பகுதியை தூய்மையாகவும், பழைய பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொண்டு, கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதேசமயம் அரசு அதிகாரிகளும், சுகாதாரக் குறைகள் பற்றிய விழிப்புணர்வை, வணிக வளாகங்களுக்கு முறையான அறிவிப்புகள் வழங்கி, மறுமுறை அதே நிலை நீடித்தால் மட்டுமே அபராதம் என்ற நிலைக்கு செல்லவேண்டும் எனவும், தேவையற்ற அபராத விதிப்புகளுக்கு அதிகாரிகள் துணைபோக அரசு அனுமதிக்கக்கூடாது.

    இவ்வாறு விக்கிரமராஜா கூறி உள்ளார். #Swineflu #Dengue

    Next Story
    ×