search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணமகனுக்கு டெங்கு காய்ச்சல்- திருமணத்தை நிறுத்திய பெற்றோர்
    X

    மணமகனுக்கு டெங்கு காய்ச்சல்- திருமணத்தை நிறுத்திய பெற்றோர்

    ஆலங்குடி அருகே மணமகன் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதால் நேற்று நடக்க இருந்த திருமணத்தை பெற்றோர் நிறுத்தியுள்ளனர். #DengueFever

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த கறம்பக்குடி அருகேயுள்ள பல்லவராயன்பத்தை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 27). இவருக்கும் கறம்பக்குடியை சேர்ந்த ஜீவிதா என்ற பெண் ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

    திருமணத்திற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வந்தனர்.

    கடந்த வாரம் பாண்டியனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. கறம்பக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டெங்கு அறிகுறி இருந்தது.

    அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    நேற்று, திருமணம் நடத்த திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் நடந்தன. உணவு வகைகளும் தயார் செய்யப்பட்டு இருந்தன. மணமகன் பாண்டியனை உறவினர்கள் அழைத்து வர சென்றபோது தனியார் மருத்துவமனை நிர்வாகம் அவரை டிஸ்சார்ஜ் செய்ய மறுத்துவிட்டது.

    தற்போது காய்ச்சலின் தாக்கம் குறைந்து வருகிறது. வெளியே சென்றால் விபரீதமாகிவிடும். எனவே அவர் தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.

    இதனால் நேற்று நடக்க இருந்த திருமணத்தை இரு வீட்டாரும் பேசி ஒத்தி வைத்து விட்டனர். மீண்டும் ஒரு நல்ல நாள் பார்த்து திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் முடிவெடுத்து அறிவித்தனர். இதற்கிடையே திருமண விழாவில் கலந்து கொள்ள வந்தவர்கள் தகவலறிந்து ஏமாற்றத்துடன் சென்றனர். #DengueFever

    Next Story
    ×