search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்- தமிழக அரசுக்கு ஜிகே வாசன் கோரிக்கை
    X

    பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்- தமிழக அரசுக்கு ஜிகே வாசன் கோரிக்கை

    பட்டாசுத்தொழில் மேம்பட, பட்டாசு உற்பத்தி அதிகரிக்க, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று ஜிகே வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். #GKVasan
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் பட்டாசு உற்பத்திக்கும் மற்றும் விற்பனைக்கும் தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருகின்ற வேளையில் முன்னெச்சரிக்கை, முன்னேற்பாடான நடவடிக்கைகளில் ஈடுபடவும் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்

    நாடு முழுவதும் பட்டாசு உற்பத்திக்கும் மற்றும் விற்பனைக்கும் தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. மகிழ்ச்சிக்குரியது. மேலும் தீபாவளி மட்டுமல்லாமல் அனைத்து பண்டிகை நாட்களிலும் பட்டாசு வெடிக்கலாம் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த தீர்ப்பு பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த சிவகாசி, விருதுநகர் உள்பட நாடு முழுவதும் பட்டாசுத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கிடைத்திருக்கும் நியாயமான, சந்தோசமான தீர்ப்பு. உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் இத்தீர்ப்பினால் பட்டாசுத் தொழில் மேம்பட்டு, பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுவோரும், தொழிலாளர்களும் முன்னேற்றம் காண வேண்டும்.

    நம் நாட்டில் சீனப்பட்டாசு போன்ற வெளிநாட்டின் தயாரிப்பில் கள்ளத்தனமாக விற்கப்படுகின்ற பட்டாசுகளை எவரும் வாங்க முன்வர வேண்டாம். நம் நாட்டில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை மட்டுமே வாங்கி நம் நாட்டு உற்பத்திக்கும், தொழிலாளர்களுக்கும் நாம் தான் ஆதரவாக இருக்க வேண்டும்.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வருகின்ற வேளையில் பட்டாசுக் கடைகளுக்கு உரிய அனுமதி, அங்கீகாரம் கொடுத்து விற்பனைக்கும், வியாபாரத்திற்கும் துணை நிற்கவும், தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளவும், முன்னெச்சரிக்கை, முன்னேற்பாடான நடவடிக்கைகளில் ஈடுபடவும் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

    மொத்தத்தில் பட்டாசுத்தொழில் மேம்பட, பட்டாசு உற்பத்தி அதிகரிக்க, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #GKVasan
    Next Story
    ×