search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் தியாகராஜர் கோவில் சிலைகள் பாதுகாப்பகத்தில் 2-வது நாளாக சோதனை
    X

    திருவாரூர் தியாகராஜர் கோவில் சிலைகள் பாதுகாப்பகத்தில் 2-வது நாளாக சோதனை

    திருவாரூர் தியாகராஜ சாமி கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஆய்வு நடத்துவது பக்தர்கள் மற்றும் பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Idol #IdolSmuggling
    திருவாரூர்:

    திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் ராஜாராமன் தலைமையில் தொல்லியல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்டவர்கள் 2-வது நாளாக இன்றும் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்.

    தமிழகம் முழுவதும் கோவில்களில் உள்ள சாமி சிலைகள் காணாமல் போனது குறித்தும், கோவில்களில் உள்ள சிலைகள் உண்மையான வையா என்பது குறித்தும் தொல்லியல் நிபுணர்கள் மற்றும் சிலை கடத்தல் பிரிவினர் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர்.

    திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் 4,359 -க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் திருவாரூர் , தஞ்சாவூர் , நாகப்பட்டிணம், கடலூர். மாவட்டங்களில் உள்ள 626 சிறிய கோவில்களுக்குரிய ஐம்பொன் சிலைகள் ஆகும்.

    இந்த சிலைகள் அந்த கோவில்களின் திருவிழாவின் போது அறநிலையத் துறை உதவி ஆணையர் அனுமதி பெற்று சிலைகள் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு திருவிழா முடிந்த பிறகு மீண்டும் திருவாரூரில் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் பாதுகாப்பு மையத்தில் உள்ள இந்த சிலைகளின் உண்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் தலைமையில் நேற்று முதல் ஆய்வு நடைபெற்று வருகிறது.

    இந்த ஆய்வில் மத்திய தொல்லியல் துறை தென் மண்டல இயக்குனர் நம்பிராஜன் தலைமையில் 16 பேர் சிலைகளை ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆய்விற்கு சிலை கடத்தல் பிரிவினர் உரிய பாதுகாப்பினை வழங்கி வருகின்றனர்.

    இதற்கிடையே கோவில் சிலைகள் பாதுகாப்பகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளது. தொல்லியல் துறையினர் நவீன கருவிகளை கொண்டு தினமும் குறைந்தது 80 சிலைகளை தான் ஆய்வு செய்ய முடியும். எனவே அனைத்து சிலைகளையும் தொடர்ந்து ஆய்வு செய்ய தொல்லியல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலோக சிலைகளின் தொன்மை தன்மை குறித்து தொல்லியல் துறையின் மண்டல இயக்குனர் நம்பிராஜன் தலைமையில் குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.இதில் உலோக சிலைகள் மட்டுமே ஆய்விற்கு உட்படுத்தப்படுகிறது. தற்போது கற்சிலைகள் ஆய்விற்கு உட்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து சிலைகளும் ஆய்வு செய்ய நீதிமன்ற உத்தரவுபடி இந்த ஆய்வானது மேற்கொள்ளப்படுகிறது

    இங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் இருப்பதாக தகவல் கிடைத்ததின் பேரில் இந்த ஆய்வு தொடர்ந்து நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Idol #IdolSmuggling

    Next Story
    ×