search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆற்றங்கரையோரம் செல்பி எடுக்க சிறுவர்-சிறுமிகளை அனுமதிக்க கூடாது - அமைச்சர் உதயகுமார் அறிவுரை
    X

    ஆற்றங்கரையோரம் செல்பி எடுக்க சிறுவர்-சிறுமிகளை அனுமதிக்க கூடாது - அமைச்சர் உதயகுமார் அறிவுரை

    வெள்ள அபாயம் உள்ள ஆற்றுப்பகுதியில் சிறுவர்-சிறுமிகள் குளிக்கவோ, செல்பி எடுக்கவோ பெற்றோர் அனுமதிக்கக்கூடாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுரை கூறி உள்ளார். #MinisterUdayakumar #Selfie
    மதுரை:

    தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் நடப் பாண்டிற்கான வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்கவில்லை. தென்மேற்கு பருவ மழை முடிவுக்கு வருகிறது. இந்த நிலைமையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பொதுப் பணித்துறை உயர் அதிகாரிகளுடன் 4 முறை ஆலோசனை கூட்டம் நடத்தி பருவ மழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆய்வறிக்கை தயாரிக்க அறிவுறுத்தியுள்ளார்.

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையை பொறுத்தமட்டில் தொலை நோக்கு திட்டங்களுடன் பருவ மழையை எதிர்கொண்டு வருகிறோம். தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நிவாரண நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.



    வைகை அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 69 அடியாக உள்ளது. வினாடிக்கு 5,571 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வைகை அணையில் இருந்து 38 ஆண்டுகளுக்கு பிறகு உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட பாசன நிலங்கள் பயன்பெறும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    வெள்ள அபாய எச்சரிக்கையை பொறுத்தமட்டில் அது விழிப்புணர்வு செய்தி மட்டுமே. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். எனவே யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்.

    மேலும் பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இது விடுமுறை காலம் என்பதால் சிறுவர்-சிறுமிகள் வெள்ள அபாயம் உள்ள ஆற்றுப் பகுதியில் சிறுவர்-சிறுமிகள் குளிக்கவோ, செல்பி எடுக்கவோ பெற்றோர் அனுமதிக்கக்கூடாது. ஆற்றங்கரையில் எந்த நேரமும் நீர்மட்டம் அதிகரிக்கலாம்.

    வைகை ஆற்று கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் செயல்பட்டு வருகிறது. இதில் அழைத்தால் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுபவார்கள்.

    வடகிழக்கு பருவ மழையை பொறுத்தவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்த மழை பெய்யும் என்பதால் அதிகாரிகளுக்கு ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் பொதுமக்களுக்கு உதவ 9597176061 என்ற அலைபேசி எண் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterUdayakumar #Selfie
    Next Story
    ×