search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    69 அடியை நெருங்கிய வைகை அணை நீர்மட்டம் - 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
    X

    69 அடியை நெருங்கிய வைகை அணை நீர்மட்டம் - 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

    வைகை அணை நீர்மட்டம் 69 அடியை நெருங்கி உள்ளதால் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட உள்ளது. #VaigaiDam
    கூடலூர்:

    கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    மேலும் வருசநாடு, வெள்ளிமலை ஆகிய மூலவைகையாறு நீர்பிடிப்பு பகுதியிலும் பெய்து வரும் மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து 2762 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 68.34 அடியாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 66 அடியை எட்டியபோது முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விரைவில் 69 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று மாலை 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஆண்டு 2-வது முறையாக வைவை அணை நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முல்லைப்பெரியாய அணையின் நீர்மட்டம் 133.75 அடியாக உள்ளது. 1953 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1977 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடியாக உள்ளது. 130 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 4.2, தேக்கடி 8, கூடலூர் 13.6, சண்முகாநதி அணை 17, உத்தமபாளையம் 8.6, வீரபாண்டி 8, வைகை அணை 8.4, மஞ்சளாறு 77, சோத்துப்பாறை 16, கொடைக்கானல் 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. இன்று காலையும் தொடர்ந்து பெய்து வருகின்றது. #VaigaiDam
    Next Story
    ×