search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்னாவை விரட்ட கொண்டுவரப்பட்ட கும்கி யானைகள்.
    X
    மக்னாவை விரட்ட கொண்டுவரப்பட்ட கும்கி யானைகள்.

    போடி, தேவாரம் பகுதியில் மிரட்டும் ஆட்கொல்லி யானையை பிடிக்க கும்கிகள்

    போடி, தேவாரம் பகுதியில் மிரட்டி வரும் ஆட்கொல்லி யானையை பிடிக்க கும்கி யானைகள் வந்தன. #MagnaElephant

    உத்தமபாளையம்:

    போடி மற்றும் தேவாரம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஆட்கொல்லி யானை அட்டகாசம் செய்து வருகிறது. நள்ளிரவு சமயத்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் புகுந்து தாக்கியதில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர்.

    எனவே மக்னா யானையை பிடித்து இடமாற்றம் செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதன்படி கடந்த ஜூலை மாதம் கலீம், மாரியப்பன் 2 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டன.

    இதனை தொடர்ந்து மக்னா யானை கேரளாவில் உள்ள மதிகெட்டான் கானல் பகுதிக்கு இடம் பெயர்ந்தது. ஆனால் மீண்டும் தேவாரம் வனப்பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்யத்தொடங்கியது.

    தற்போது அம்பேத்கார்காலனி, மூணான்டிபட்டி ஆகிய குடியிருப்பு பகுதியில் சுற்றி வருகிறது.

    எனவே மக்னா யானையை பிடிக்க சாக்கலூத்து, தாழையூத்து உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் டாப்சிலிப் காப்பகத்திலிருந்து விஜய், வாசிம் ஆகிய 2 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டு கம்பம் வனஅலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

    கேமிராவில் பதிவாகும் மக்னா யானையின் நடமாட்டத்தை வைத்து கும்கி யானைகள் மற்றும் சிறப்பு வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர் குழுவினர் வனப்பகுதிக்கு சென்று மக்னா யானையை விரட்டும் பணியில் ஈடுபடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். #MagnaElephant

    Next Story
    ×