search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுகவை விமர்சிக்க தகுதி இல்லை: தினகரன் மீது ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
    X

    அதிமுகவை விமர்சிக்க தகுதி இல்லை: தினகரன் மீது ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

    டி.டி.வி. தினகரன் தற்போது அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லை. அவர் ஏற்கனவே அம்மாவால் வெளியேற்றப்பட்டவர் என்று அமைச்சர் உதயகுமார் பேசினார். #ministerudayakumar #dinakaran

    மதுரை:

    திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட சிலைமான் பகுதியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஏற்கனவே அம்மா பேரவை சார்பில் அரசின் சாதனைகளை விளக்கி இளைஞர்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணியை நடத்தி வருகிறோம். இது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

    திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியிலும் இளைஞர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி நடந்தது. இதில் பெண்களும் அரசின் சாதனைகளை விளக்கி கூறுவதற்காக சைக்கிள் பேரணியில் பங்கேற்கிறோம் என்று ஆர்வம் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் வருகிற 24-ந் தேதி 2,500 பெண்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணி நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, வேலுமணி உள்ளிட்ட 15 அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    சைக்கிள் பேரணியில் பங்கேற்கும் பெண்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ரிங்ரோடு வேலம்மாள் திருமண மண்டபத்தில் நாளை (13-ந் தேதி) பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

    இதில் அமைச்சர்கள் ராஜலட்சுமி, வளர்மதி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார்கள்.

    அரசின் சாதனைகளை எடுத்துக்கூறும் இந்த சைக்கிள் பேரணி ஜெயலலிதா பேரவை சார்பில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளின் பங்களிப்புடன் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது.

    ஒரு தனி நபரால் இதை செய்ய முடியாது. அனைவரின் கூட்டு முயற்சியோடு இதை நடத்தி வருகிறோம்.

    இந்த சைக்கிள் பேரணிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், தேவையற்ற அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்த தீர்மானத்தை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து ஒருங்கிணைப்பாளர்- துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது தைைமையின் கீழ் செயல் பட்டு வருகிறோம்.

    டி.டி.வி. தினகரன் தற்போது அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லை. அவர் ஏற்கனவே அம்மாவால் வெளியேற்றப்பட்டவர்.

    1.10 கோடி உறுப்பினர்கள் கொண்ட அ.தி.மு.க. வில் தங்களது உறுப்பி னர் அட்டைகளை புதுப்பித்தவர்கள் தான் உறுப்பினர் என்ற தகுதியை பெறுவார்கள். தினகரன் போன்றவர்கள் உறுப்பினர் படிவத்தை புதுப்பிக்கும் தகுதி இல்லாதவர்கள்.

    அவர் அ.தி.மு.க.வில் உறுப்பினராவது என்பது முடிந்து போன ஒன்று. ஆனால் அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தவும், தொண்டர்களிடம் சலசலப்பை உருவாக்கவும் தினகரன் போன்றவர்கள் அவ்வப்போது அவதூறு செய்து வருகிறார்கள். அது எடுபடாது.

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்பது ஒரு அங்கீகாரம் இல்லாத இயக்கம். தினகரன் தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக, தனக்கு பதவியை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கம் தான் அ.ம.மு.க. இதற்கு தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் வழங்கவில்லை.

    தினகரன் சுயேட்சை எம்.எல்.ஏ.வாகத்தான் இன்னும் இருக்கிறார். கருத்து தெரிவிக்கும் அமைச்சர்கள் மீது அவர் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார். அதை மக்கள் நம்ப மாட்டார்கள்.

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது வழிகாட்டுதலில் அ.தி.மு.க. தெளிவான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

    கற்பை இழந்த பெண் கண்ணகியை அடையாளம் காட்ட முடியாதது போல தினகரன் அ.தி.மு.க.வில் சேரும் தகுதியை இழந்து விட்டார்.


    தினகரனையும், அவரது குடும்பத்தினரையும் நாங்கள் தான் தோளில் தூக்கிச் சுமந்தோம். அந்த குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக, நிலையாக பயணித்து வருகிறோம்.

    அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த பல்வேறு யுக்திகளை செய்து வருகிறார்கள். தங்களை நிலைநிறுத்திக் கொள்ள தினகரன் செய்து வரும் சூழ்ச்சிகள் தமிழகத்தின் சாபக்கேடு.

    தி.மு.க.வில் ஒதுக்கி வைத்துள்ள அழகிரியுடன், தினகரன் கள்ள கூட்டணி வைத்துள்ளார்.

    திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் அ.தி.மு.க. வின் தோல்வி பயத்தால் தள்ளி வைக்கப்படவில்லை. திருப்பரங்குன்றம் தொகுதி மக்களை அ.தி.மு.க.வினர் தினமும் சந்தித்து வருகிறார்கள். நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.

    எப்போது தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    பேட்டியின் போது சரவணன் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் வெற்றிவேல், தமிழரசன், மாரிச்சாமி உள்ளிட்ட பலர் இருந்தனர். #ministerudayakumar #dinakaran

    Next Story
    ×