search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கைதி முருகனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
    X
    தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கைதி முருகனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கடலூர் மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி

    கடலூர் மத்திய சிறையில் இன்று காலை கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் அன்சர்மீரான் (வயது 29). இவர் ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் சிறையை தகர்த்து அன்சர்மீரானை கடத்த பயங்கரவாத அமைப்பு சதித்திட்டம் தீட்டுவதாக மத்திய புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவும், பகலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி நாகை மாவட்டம் மயிலாடுதுறை நீடூரை சேர்ந்தவர் மன்சூர்அலி (வயது 52) என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் திடீரென்று சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    கடலூர் மத்திய சிறையில் இன்று காலை மேலும் ஒரு கைதி தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதுபற்றி விவரம் வருமாறு:-

    விழுப்புரம் மாவட்டம் மாம்பழம்பட்டு பகுதியை சேர்ந்த முருகன்(வயது 37) கடந்த சில நாட்களுக்கு முன்பு சாராய வழக்கில் விழுப்புரம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

    இன்று காலை அறையில் அவர் திடீரென்று தான் அணிந்திருந்த ஜட்டியை எடுத்து கழுத்தில் இறுக்கி தற்கொலை செய்ய முயன்று மயங்கி விழுந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஜெயிலர் இதைபார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ஜெயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனே அவர்கள் விரைந்து வந்து மயங்கி கிடந்த முருகனை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார், சிறைத்துறை அதிகாரிகளும் கைதி முருகன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தசம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×