search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பனப்பட்டியில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது எடுத்த படம்.
    X
    பனப்பட்டியில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது எடுத்த படம்.

    தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும்- உதயநிதி ஸ்டாலின்

    தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று கிணத்துக்கடவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். #DMK #UdhayanidhiStalin
    நெகமம்:

    அ.தி.மு.க. அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள பனப்பட்டி கிராமத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    மேடையில் இருப்பது பெருமையல்ல, கீழே தொண்டர்களுடன் அமர்ந்து கொள்கிறேன் என நிர்வாகிகளிடம் சொன்னேன். ஆனால் என்னை கட்டாயப்படுத்தி மேடையில் ஏற்றியிருக்கின்றனர். மேடையில் இருப்பதால் தொண்டர்களை பார்க்க முடிகின்றது. தலைவர் கலைஞர் அவர்களை வணங்கி உரையை தொடங்குகின்றேன்.

    தமிழகம் முழுவதும் ஊழல் அ.தி.மு.க. அரசை கண்டித்து பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. இதற்கு அனுமதி வழங்கவில்லை. நீதிமன்றம் சென்று தான் அனுமதி பெற்றுள்ளோம். இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    தலைவர் கலைஞரின் மறைவுக்கு பிறகு கூட நீதிமன்றம் சென்று போராடித்தான் மெரினாவில் இடம் வாங்கினோம்.

    எடப்பாடி பழனிசாமி எப்போதும் அம்மாவின் ஆட்சி நடைபெறுகிறது என்று சொல்கிறார். ஒரு வேளை ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் பெங்களூர் சிறையில்தான் இருந்திருப்பார். இப்போதுள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் வீடு புகுந்து திருடவில்லை. அந்த அளவுக்கு மோசமான ஆட்சி நடைபெறுகிறது.

    தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது ஊழல் அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள். தமிழகத்தில் 38 ஆயிரம் போராட்டத்துக்கு அனுமதி வழங்கி உள்ளோம் என எடப்பாடி பழனிசாமி கூறுகின்றார்.

    மக்கள் நிம்மதியாக இல்லை என்பதால் தான் போராடுகின்றனர். இது தெரியாமல் அதிக போராட்டம் இங்கு தான் நடக்கின்றது என முதல்-அமைச்சர் பெருமையாக சொல்கின்றார்.

    எடப்பாடி பழனிசாமி ஒரு கூட்டத்தில் பேசும் போது, நமது தலைவர் குறுக்கு வழியில் வந்ததாக கூறி உள்ளார். நீங்கள் எப்படி இருந்தீர்கள் என அனைவருக்குமே தெரியும். சசிகலாவின் காலை பிடித்து வந்தவர்கள் நீங்கள். ஆனால் உழைப்பால் உயர்ந்தவர் நமது தலைவர்.

    ஸ்டாலினுக்கு அடுத்த படியாக உதயநிதி வரிசையில் வந்து விட்டார் என எடப்பாடி பழனிசாமி சொல்கின்றார். நான் அரசியலுக்கு வந்தது தலைமை பொறுப்பை ஏற்பதற்கு அல்ல, கடைசி தொண்டனுக்கு தோள் கொடுப்பதற்காகத் தான்.

    இவ்வாறு அவர் பேசினார். #DMK #UdhayanidhiStalin
    Next Story
    ×