search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோட்டார் சைக்கிள் விபத்து - சாலையோர குழியில் உள்ள மழை தண்ணீரில் விழுந்து வாலிபர் பலி
    X

    மோட்டார் சைக்கிள் விபத்து - சாலையோர குழியில் உள்ள மழை தண்ணீரில் விழுந்து வாலிபர் பலி

    சேலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தால் சாலையோர குழியில் உள்ள மழை தண்ணீரில் விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Rain #accident

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

    இதில் சேலம், மாநகர், எடப்பாடி, சங்ககிரி, ஏற்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    அப்போது சேலம் மாவட்டம் சிவதாபுரம் பாலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த நிலையில் வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார். இதை பார்த்த அந்த பகுதியினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக் கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

    எனது பெயர் ஈஸ்வர மூர்த்தி, நானும், எடப்பாடி அருகே உள்ள சித்தூரை சேர்ந்த குமார் (வயது36) என்பவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சேலம் நோக்கி வந்தோம். சிவதாபுரம் பாலம் பகுதியில் வந்த போது மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எங்கள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட நானும், என்னுடன் வந்த குமாரும் (வயது 36) படுகாயம் அடைந்தோம். ஆனால் எதிரே வந்தவர்கள் லேசான காயத்துடன் தப்பியதால் அங்கிருந்து சென்று விட்டனர். அந்த பகுதியில் தண்ணீர் சூழ்ந்திருந்தத நிலையில் என்னுடன் வந்த குமாரை திடீரென காணவில்லை என்று கூறினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கொண்டலாம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினரும் அந்த பகுதிக்கு விரைந்து சென்று நேற்றிரவு குமாரை தேடினர். ஆனால் குமார் கிடைக்கவில்லை.

    பின்னர் இன்று அதிகாலை முதல் போலீசாரும், தீயணைப்பு படையினரும் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது விபத்து நடந்த சாலையோரம் கிடந்த 5 அடி ஆழ குழியில் நிரம்பியிருந்த மழை தண்ணீரில் மூழ்கி குமார் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

    அவரது உடலை மீட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த குமாரின் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் குமாரின் உடலை பார்த்து கதறி அழுது புரண்டனர்.

    மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியவர் சாலை யோரம் கிடந்த தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையோரம் கிடக்கும் குழிகளை மூட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×