search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலக்கரி பற்றாக்குறை எதிரொலி - மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2-வது நாளாக மின் உற்பத்தி நிறுத்தம்
    X

    நிலக்கரி பற்றாக்குறை எதிரொலி - மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2-வது நாளாக மின் உற்பத்தி நிறுத்தம்

    நிலக்கரி பற்றாக்குறை எதிரொலியால் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2-வது நாளாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. #coal #CoalImportScam

    மேட்டூர்:

    மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவான பழைய அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.

    2-வது பிரிவான புதிய அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும். 2 அனல் மின் நிலையங்களிலும் சேர்த்து மொத்தம் 1440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம்.

    கடந்த வாரம் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 1040 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. நிலக்கரி வேகன்கள் வந்ததால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.


    இந்த நிலையில் போதுமான நிலக்கரி இருப்பு இல்லாததால் நேற்று முதல் மீண்டும் பழைய அனல் மின் நிலையத்தில் 4-வது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 2-வது நாளாக இன்றும் அந்த அலகில் 210 மெகா வாட் மின் உற்பத்தி முடங்கி உள்ளது.

    மேட்டூர் அனல் நிலையத்தில் 50 ஆயிரம் டன்னுக்கும் குறைவாகவே நிலக்கரி இருப்பு உள்ளது. இதனால் பழைய அனல் மின் நிலையத்தில் 4-வது யூனிட் நிறுத்தப்பட்டுள்ளதால் 840 மெகாவாட்டுக்கு பதிலாக 630 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    மேட்டூ புதிய அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்திக்கு பதிலாக இன்று 400 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தேவைக்கு தகுந்தாற் போல மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

    தற்போது மின்சாரம் குறைவாக தேவைப்படுவதால் பழைய அனல் மின் நிலையத்தில் 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தேவை அதிகரிக்கும் போது 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்றனர்.#coal #CoalImportScam

    Next Story
    ×