search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே ஓ.பி.எஸ். கார் முற்றுகை- மறியல்
    X

    தேனி அருகே ஓ.பி.எஸ். கார் முற்றுகை- மறியல்

    தேனி அருகே துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் காரை சீர்மரபினர் மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #opanneerselvam

    உத்தமபாளையம்:

    தேனி அருகே உத்தமபாளையம் அடுத்த சுருளி அருவியில் சாரல் விழா நடந்தது. இந்த விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    அந்த சமயத்தில் சீர்மரபினர் மக்களுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் அங்கீகாரம் வழங்க வேண்டும். நல வாரிய திட்டங்களை செயல்படுத்தக் கோரி அந்த அமைப்பின் மாநில பொறுப்பாளர் தவமணி அம்மாள் தலைமையில் துணை முதல்வரிடம் மனு கொடுக்க வந்தனர். ஆனால் போலீசார் 3 பேருக்கு மட்டுமே மனு வழங்க அனுமதி கொடுத்தனர். இதனால் சீர் மரபினர் ஆத்திரமடைந்தனர்.

    விழா முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களின் கார்கள் புறப்பட்டது. உடனே சீர்மரபினர் ஓ.பி.எஸ். காரை முற்றுகையிட்டனர். அதோடு நடு ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர்.

    எங்கள் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கோ‌ஷம் போட்டனர். உஷாரான போலீசார் சீர்மரபினரை சமரசப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  #opanneerselvam

    Next Story
    ×