search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாட்ஸ்-அப்பில் பெண்ணுடன் ஆபாச பேச்சு- போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது 4 பிரிவுகளில் வழக்கு
    X

    வாட்ஸ்-அப்பில் பெண்ணுடன் ஆபாச பேச்சு- போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

    குமரியில் வாட்ஸ்- அப்பில் பெண்ணுடன் ஆபாசமாக பேசியது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஐகோர்ட்டு உத்தரவுப்படி மகளிர் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஒருவர், இளம்பெண் ஒருவருடன் வீடியோ காலில் ஆபாசமாக பேசும் காட்சிகள் கடந்த ஜூலை மாதம் வாட்ஸ்- அப்பில் பரவியது.

    இச்செய்தி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது பற்றி விசாரணை நடத்த போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில் நடந்த விசாரணையில் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேசியது கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பென்சாம் என்பது தெரிய வந்தது. அவர் பேசிய பெண், நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

    வீடியோ காலில் சீருடையில் இன்ஸ்பெக்டர் பேசியதால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகள் குழுவும் அமைக்கப்பட்டது.

    போலீஸ் உயர் அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்ஸ்பெக்டருடன் வீடியோ காலில் பேசிய பெண், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

    அந்த பெண் தாக்கல் செய்த வழக்கில் தன்னை அவதூறாக பேசிய இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, புகாருக்கு ஆளான கருங்கல் இன்ஸ்பெக்டர் பென்சாம் மீது நாகர்கோவில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது.

    ஐகோர்ட்டு உத்தரவுப்படி நாகர்கோவில் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி இது தொடர்பாக விசாரணை நடத்தினார். பின்னர் இன்ஸ்பெக்டர் பென்சாம் மீது இந்திய தண்டனை சட்டம் 354(ஏ)(டி), பெண்ணை மானபங்கபடுத்தும் விதத்தில் பேசுதல், 506/1 கொலை மிரட்டல், தகவல் தொழில் நுட்ப சட்டம் 67 மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் 4 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தார்.

    செக்ஸ் புகார் தொடர்பாக பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது குமரி மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×