search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல்லில் கைதான முன்னாள் எம்.எல்.ஏ.சரஸ்வதி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு
    X

    நாமக்கல்லில் கைதான முன்னாள் எம்.எல்.ஏ.சரஸ்வதி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு

    அமைச்சர் தங்கமணி பற்றி அவதூறு பரப்பியதாக கைதான முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    நாமக்கல்:

    அமைச்சர் தங்கமணியை பற்றி முன்னாள் எம்.எல்.ஏ.சரஸ்வதி வாட்ஸ்-அப்பில் அவதூறாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி சரஸ்வதியை கைது செய்தனர்.

    இவர் மீது 505 (பி) பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் பேசுதல், 153- ஆத்திரம், கோபம் ஏற்படும் வகையில் தகவல் பரப்புதல், 194(பி)-அசிங்கமாக திட்டுதல், 504- கோபமாக பொதுமக்களுக்கு பீதி ஏற்படும் வகையில் பேசுதல், 506(1)-கொலை மிரட்டல் விடுவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி கைது செய்யப்பட்டதற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காந்திச்செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு, நீதிமன்றத்தை அவதூறாக பேசிய பா.ஜ.க. தேசிய தலைவர் எச்.ராஜாவையும், தமிழக அரசு மற்றும் முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய கருணாசையும் கைது செய்ய முடியாத நிலையில், வாட்ஸ்-அப்பில் பொய்யான தகவல் பரப்பியதாக கூறி பொய் வழக்கு போட்டு தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இது குறித்து தலைமையிடத்தில் பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர், அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×