search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- கனிமொழி பேச்சு
    X

    தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- கனிமொழி பேச்சு

    தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார். #DMK #Kanimozhi #DMKProtest
    திண்டிவனம்:

    விழுப்புரம் வடக்கு மாவட்டம் சார்பில் திண்டிவனம் வண்டிமேடு வ.உ.சி. திடலில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    மு.க.ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் ஆர்ப்பாட்டம் இது. தமிழகத்தில் ஊழல், லஞ்சம், கொள்ளை அதிகரித்துள்ளது.

    கேரளாவில் மழையால் ஏற்பட்ட பாதிப்பை விட, தமிழகத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பை விட அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் பேரழிவுக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள்.

    அத்தனை துறைகளிலும் ஊழல் நடக்கிறது. நல்ல அதிகாரிகள் மாற்றப்பட்டு அவர்களை தொல்லைக்கு ஆளாக்குகிறார்கள். மக்களால் ஓட்டுப்போட்டு முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி வரவில்லை. தமிழகத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் முதல்-அமைச்சராகி உள்ளார்.

    இந்த ஆட்சியில் எந்த திட்டமும் வளர்ச்சி அடையவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. தலைமை செயலாளர் இந்த அரசுக்கு பினாமியாக செயல்படுகிறார். நீதிமன்றத்தையும், போலீசாரையும் அவமதித்த பாரதிய ஜனதா பிரமுகர் எச்.ராஜா கைது செய்யப்படவில்லை.

    சேலம்-சென்னை 8 வழிச்சாலை அமைப்பதில் முதல்-அமைச்சர் எடப்பாடி ஆர்வமாக உள்ளார். இதற்கு கமி‌ஷன்தான் காரணம்.

    இவ்வாறு அவர் பேசினார். #DMK #Kanimozhi #DMKProtest
    Next Story
    ×