search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.ஜி.பி. ராஜேந்திரன் பதவி விலகாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன்- ஜெ.அன்பழகன் பேச்சு
    X

    டி.ஜி.பி. ராஜேந்திரன் பதவி விலகாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன்- ஜெ.அன்பழகன் பேச்சு

    டி.ஜி.பி. ராஜேந்திரன் பதவி விலகாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்று இன்று நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஜெ.அன்பழகன் பேசினார். #DMK #DMKProtest
    சென்னை:

    அ.தி.மு.க. அரசின் ஊழலை கண்டித்தும், குட்கா ஊழலில் சி.பி.ஐ. விசாரணையில் சிக்கி உள்ள போலீஸ் அதிகாரிகள், அமைச்சர் ஆகியோர் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் காணப்படுகிறது. பொதுப் பணித்துறை நெடுஞ்சாலைத் துறையில் உள்ள ஊழல்களை உயர்நீதிமன்றமே பட்டியலிடுகிறது. இதுவரை கொடுக்கப்பட்ட டெண்டர் விவரங்களை பட்டியலிட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ், வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தி உள்ளது. ஆனாலும் இவர்கள் பதவி விலக மறுக்கிறார்கள்.

    எந்த புகாருக்கும் ஆளாகாதவர்தான் பதவி நீடிப்பில் டி.ஜி.பி.யாக இருக்க முடியும். ஆனால் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பதவி விலகாமல் தொடர்ந்து நீடிக்கிறார்.

    எனவே அவர் பதவி விலகாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் நான் வழக்கு தொடருவேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்யும் அமைச்சர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் மு.க.தமிழரசு, முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், எம்.எல்.ஏ.க்கள் அண்ணா நகர் மோகன், கு.க.செல்வம், தலைமை கழக நிர்வாகி பூச்சி முருகன், வி.எஸ்.ராஜ், பகுதி செயலாளர்கள் சேப்பாக்கம் மதன்மோகன், ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், மா.பா.அன்புதுரை, ராமலிங்கம், கே.ஏழுமலை, ஜெ.கருணாநிதி, வேலு, அகஸ்டின்பாபு, பரமசிவம், மாணவரணி மாநில துணை செயலாளர் மோகன், பகுதி துணை செயலாளர் சேப்பாக்கம் பா.சிதம்பரம், லாகூர், கோவிந்தன், மாரி, பாபா சுரேஷ், மேட்டுக்குப்பம் கமலக்கண்ணன், முத்து ராமன், தனிகாசலம், பிரசன்னா, ராமச்சந்திரன் வடிவேலு உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கந்தன் சாவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இதில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பங்கேற்று பேசினார். அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் நடைபெறுவதாக குறிப்பிட்டார்.

    தாம்பரத்தில் காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ. அன்பரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, திண்டுக்கல் லியோனி, வைத்தியலிங்கம், தமிழ்மணி, மேடவாக்கம் ரவி, படப்பை மனோகரன், பெருங்களத்தூர் சேகர், புகழேந்தி, பம்மல் கருணாநிதி, பொழிச்சலூர் வனஜா, மாவட்ட பிரதிநிதி ரஞ்சன், செல்வகுமார், இமயவர்மன், ஜோசப் அண்ணாதுரை, ஜானகிராமன், சிவக்குமார், திருநீர்மலை ஜெயக்குமார், காமராஜ், தமிழ்மாறன் உள்பட ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் பங்கேற்று தமிழக அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    கட்டுமானத் தொழிலாளர் கட்சி பொன்.குமார், எஸ்.அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ., வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ., பாலவாக்கம் சோமு, வேளச்சேரி மணிமாறன், க.தனசேகரன், மகேஷ்குமார், பாலவாக்கம் த.விஸ்வநாதன், துரை.கபிலன், வாசுகிபாண்டியன், இப்ராஹிம், பி.டி.சி.செல்வராஜ், எஸ்.வி.ரவிச்சந்திரன், மதியழகன், கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், குணாளன், சந்திரன், கண்ணன், மு.ராஜா, சுசேகர், பாலவாக்கம் மனோகர், சி.பிரதீப், பிரேமா, பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், மாவட்டப் பிரதிநிதிகள், மாவட்ட அளவிலான அணிகளின் மாவட்ட துணை அமைப்பாளர்கள், பகுதி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள், சார்பு மன்றங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் மேம்பாலம் அருகே சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினார்.

    இதில் கே.பி.பி.சாமி எம்.எல்.ஏ., சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தி.மு.க. மாநில பிரசார குழு செயலாளர் சிம்லா முத்துச்சோழன், கிரிராஜன், ஆர்.டி.சேகர், வே.சுந்தர்ராஜன், ஜெபதாஸ் பாண்டியன், மருது கணேஷ், பி.டி.பாண்டிச்செல்வம், ரெயின்போ விஜயகுமார், ஏ.வி.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறன் சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது, தமிழகத்தில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி ஊழலில் மிதந்து கொண்டுள்ளது. குட்கா ஊழலுக்கு ஆளான அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. பதவி விலக வேண்டும் அவர்கள் கொள்ளையடித்த பணம் மக்களின் வரிப்பணம். அரசு கஜானாவுக்கும், மக்களின் திட்டங்களுக்கம் வரிப்பணம் அமைச்சர்கள் ஊழல் செய்து கொள்ளையடிக்கின்றனர்.

    ஆகவே தமிழகம் தலை நிமிர தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் விரைவில் ஆட்சி மலர அனைவரும் சம்மதமேற்று பணியாற்றுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சேகர்பாபு எம்.எல்.ஏ. பேசும்போது, ‘‘தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியில் அமைச்சர் மீது குட்கா வழக்கு, சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் டி.ஜி.பி. மீது ஊழல் வழக்கு உள்ளது. இது பற்றி முதல்-அமைச்சரிடம் புகார் செய்ய சென்றால் அவர் மீதே கோர்ட்டில் வழக்கு இருக்கிறது. துணை முதல்-அமைச்சர் மீதும் புகார் உள்ளது.

    டெண்டர் விடுவதில் அமைச்சர் வேலுமணி மீது ஊழல் இப்படி எல்லா துறையிலும் ஊழல் மலிந்து விட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்ததும் கட்சியில் வெற்றிடம் ஏற்பட்டு விடும் என்று சொன்னார்கள். ஆனால் தளபதி தலைமைஏற்று கட்சி வீறுநடை போட்டு செல்கிறது. விரைவில் சட்டமன்ற தேர்தலோ அல்லது பாராளுமன்ற தேர்தலோ வரும். இதில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி ஏற்ப அனைவரும் பாடுபட வேண்டும்’’ என்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ரங்கநாதன், தாயகம் ரவி, ரவிச்சந்திரன் சங்கரி நாராயணன், சல்மா, பிரசன்னா, வக்கீல் சந்துரு, பகுதி செயலாளர்கள் ஜி.சி.எப்.முரளி, ராஜசேகர், நாகராஜன், ஜோசப் சாமுவேல், வாசு, ஜெயின், விஜயகுமார், வேலு தமிழ் வேந்தன், சாமிக்கன்னு, உதயா மாவட்ட நிர்வாகி ஏகப்பன், தேவஜவகர் ராதாகிருஷ்ணன், புனித வதி எத்திராஜன், ஆசாத் செம்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர். கவியரசு நன்றி கூறினார். பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர். #DMK  #DMKProtest
    Next Story
    ×