search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல் லிட்டருக்கு 10 காசு அதிகரிப்பு- சென்னையில் 86 ரூபாயை நெருங்குகிறது
    X

    பெட்ரோல் லிட்டருக்கு 10 காசு அதிகரிப்பு- சென்னையில் 86 ரூபாயை நெருங்குகிறது

    பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு இன்று 10 காசுகள் அதிகரித்தது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.41க்கு விற்றது. #PetrolPriceHike
    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயில் ஏற்படும் மாற்றம் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தபடி உள்ளது.

    கடந்த 6 வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து தினமும் அதிகரித்து வருகிறது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டன. அதோடு பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் கொண்டு வந்து கட்டுப்படுத்தவும் கோரிக்கை விடப்பட்டது.

    ஆனால் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து விட்டது. 4 மாநிலங்கள் மட்டுமே பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்துள்ளன. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.

    இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் (செவ்வாய்க்கிழமை) உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு இன்று 10 காசுகள் அதிகரித்தது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.41க்கு விற்றது.

    சென்னையில் சில நிறு வனங்களின் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் விலை 86 ரூபாயை நெருங்கியுள்ளது. டீசல் விலை இன்று 10 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.78.10 ஆக விற்பனையானது.

    பெட்ரோல் விலை மீது மராட்டியத்தில்தான் அதிக வரி விதிக்கப்படுகிறது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத், ரத்னகிரி, பீட், லாத்தூர், பர்பனி, ஹங்கோலி, நந்தூர் பார், நாண்டெட், ஜால்னா, ஜல்காவ், கோண்டியா, புல்தானா ஆகிய 12 நகரங்களில் பெட்ரோல் விலை 90 ரூபாயை கடந்துள்ளது.

    நான்டெட் மாவட்டத்தில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாயை நெருங்கி விட்டது. அடுத்த ஓரிரு நாட்களில் கச்சா எண்ணை விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே பெட்ரோல், டீசல் விலை கட்டுப்படும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

    சென்னையில் கடந்த ஜனவரி மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.69.20 ஆக இருந்தது. கடந்த 8 மாதங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 17 ரூபாய் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. #PetrolPriceHike
    Next Story
    ×