search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடுத்த தேர்தலில் முக ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராகக்கூட வர முடியாது- அமைச்சர் செல்லூர் ராஜூ
    X

    அடுத்த தேர்தலில் முக ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராகக்கூட வர முடியாது- அமைச்சர் செல்லூர் ராஜூ

    இனி வரும் தேர்தல்களில் முக ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராகக்கூட வர முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். #MinisterSellurRaju #MKStalin
    மதுரை:

    மதுரை முனிச்சாலை மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் அவைத்தலைவர் துரைப்பாண்டியன் தலைமையில் நடந்தது. துணை செயலாளர் தங்கம், பொருளாளர் வில்லாபுரம் ராஜா முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    உலகத்திலே யாரும் சிந்திக்காத அளவிற்கு யோசித்து அண்ணாவின் பெயரை கட்சிக்கும், அவரது உருவத்தை கட்சியின் கொடியிலும் வைத்தவர் எம்.ஜி.ஆர்.

    எம்.ஜி.ஆர். மட்டும் அப்படி செய்யாமல் இருந்தால் அண்ணா என்ற ஒருவர் பிறந்தார், இருந்தார் என்றே யாருக்கும் தெரிந்து இருக்காது.

    அண்ணாவின் வழிப்படி கட்சியை தொடங்கி ஆட்சியை பிடித்து மக்களுக்காக சத்துணவு திட்டம் தொடங்கி மக்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தந்தவர் கலியுக கர்ணனாக விளங்கியவர் எம்.ஜி.ஆர்.

    எம்.ஜி.ஆர் தனது அரசியல் வாரிசு என மதுரையில் செங்கோல் கொடுத்து ஜெயலலிதாவை அரசியல் வாரிசு ஆக்கினார். ஜெயலலிதா ஆட்சியில் காவிரி பிரச்சினை தீர்ந்தது. முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தியது, தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றியவர்.

    மு.க.ஸ்டாலின் வீட்டுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம், நம்மை அன்றாடம் வசைபாடும் டி.டி.வி. வீட்டுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தந்தவர் ஜெயலலிதா.

    மதுரை மக்கள் பயன் பெறும் வகையில் ரூ.150 கோடி செலவில் பறக்கும் பாலங்கள், உயர் மட்ட பாலங்கள் மதுரையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.1600 கோடி செலவில் குடிநீர் திட்டம் ரூ.1500 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை, ரூ.250 கோடி செலவில் சுற்று சாலை போன்ற நல்லத்திட்டங்களை கொண்டு வரும் இந்த அரசை முக.ஸ்டாலின் எப்படி ராஜினாமா செய்ய சொல்ல முடியும். ஊழல்வாதிகளே அதிகமாக இருக்கும் தி.மு.க.வினர் எப்படி அ.தி.மு.க.வினர் மீது ஊழல் குற்றசாட்டு கூற முடியும்.

    மேலும் ஜெயலலிதா நினைவிடம் மெரினாவில் கட்டக்கூடாது என்பதற்காக வழக்கு தொடர்ந்த தி.மு.க.வினர் கலைஞருக்காக ஒரே இரவில் வழக்குகளை வாபஸ் பெற்ற தி.மு.க.வினர் இப்படி எங்கள் மீது குற்றம் சாட்டுவது நியாயமா, நீதியா? இனி வரும் தேர்தல்களில் மு.க.ஸ்டாலின் எதிர்க் கட்சி தலைவராகக்கூட வர முடியாது. இது அ.தி.மு.க.வினரின் விருப்பம் அல்ல பொதுமக்களின் விருப்பம்.

    மு.க.ஸ்டாலினால் மு.க.அழகிரியையே சமாளிக்க முடியவில்லை. எங்களை மு.க.ஸ்டாலினால் சமாளிக்க முடியாது. வாருங்கள் திருப்பரங்குன்றம் தேர்தலில் சந்திப்போம். மு.க.ஸ்டாலினின் பண பலம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. எங்களிடம் மக்கள் படை உள்ளது. இளைஞர் படை, மாணவர் படை உள்ளது. நாங்கள் எதிரியை சந்திக்க தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #MinisterSellurRaju #MKStalin
    Next Story
    ×