search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
    X
    அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

    முல்லைபெரியாற்றில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல விவசாயிகள் எதிர்ப்பு

    முல்லை பெரியாற்றில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். #MullaperiyarDam #Farmersprotest

    கூடலூர்:

    மதுரை மாநகரின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முல்லைபெரியாற்றில் இருந்து சிறப்பு கூட்டுகுடிநீர் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதனைதொடர்ந்து கூடலூர் அருகே லோயர்கேம்ப் பகுதியில் முல்லைபெரியாற்றில் இருந்து குழாய் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல திட்டம் தயாரிக்கப்பட்டது.

    ஆனால் இதற்கு தேனி மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திட்டம் செயல்படுத்தப்பட்டால் கம்பம் பகுதியில் உள்ள தடுப்பணைக்கு தண்ணீர் வராது. மேலும் தேனி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும்.

    எனவே இத்திட்டத்தை செயல்படுத்த கூடாது என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் பங்கேற்றவர்கள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்ததால் முதற்கட்ட பணிகள் தொடங்குவது நிறுத்தப்பட்டது. தற்போது இந்த திட்டம் தொடர்பாக கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் தொடங்குவதற்கு பூமிபூஜை இன்று நடைபெற்றது.

    இதை அறிந்த விவசாய சங்க பிரதிநிதிகள் அதிர்ச்சி அடைந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வைகை அணையை தூர்வாரி மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லுங்கள். இங்கிருந்து தண்ணீர் எடுத்துச்சென்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அதிகாரிகள் சமரசப்படுத்தினர். #MullaperiyarDam #Farmersprotest

    Next Story
    ×