search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 30 காசு அதிகரிப்பு
    X

    பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 30 காசு அதிகரிப்பு

    பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 30 காசுகள் அதிகரிக்கப்படுவதாக எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் 84.49 ரூபாயாக உயர்ந்துள்ளது. #PetrolPriceHike
    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்து வருவதாலும், எண்ணையை உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தி அளவை கணிசமாக குறைத்து விட்டதாலும் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்தப்படி உள்ளன.

    இந்தியாவின் பெட்ரோல்- டீசல் தேவையில் 83 சதவீதத்தை வெளிநாடுகளே பூர்த்தி செய்வதால் வெளிநாட்டு தாக்கத்தால் ஏற்படும் விலை மாற்றத்தை கட்டுப்படுத்த இயலவில்லை.

    கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல்-டீசல் விலைகள் தினமும் உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் விலை சுமார் 3 ரூபாய் அதிகரித்து விட்டது.

    டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் பெட்ரோல்-டீசல் விலை இன்றும் உயர்ந்தது.

    இன்று காலை பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 30 காசுகள் அதிகரிக்கப்படுவதாக எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் 84.49 ரூபாயாக உயர்ந்துள்ளது.

    டீசல் விலை இன்று லிட்டருக்கு 24 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஒரு லிட்டர் டீசல் ரூ. 77.49-க்கு விற்கப்படுகிறது.

    பெட்ரோல் விலை இன்னும் 50 காசுகள் உயர்ந்து விட்டால் ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாயாக உயர்ந்து விடும். நாளை இந்த அளவுக்கு விலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    மும்பையில் ஏற்கனவே ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இதையடுத்து பெட்ரோல்-டீசல் விலையை கட்டுப்படுத்த எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.

    பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளிடம் கடும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக மாத ஊதியம் மற்றும் தினக்கூலி வாங்குபவர்கள் இரண்டு சக்கர வாகனங்களுக்கு கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    எனவே பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வருகிறார்கள். #PetrolPriceHike
    Next Story
    ×